Pages

Friday, July 10, 2015

விபத்தில் சிக்கிய அதிரை வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

அதிரை நடுவிக்காட்டை சேர்ந்தவர் அமர் கார்த்திக் ( வயது 32 ) இவர் கட்டிட வேலைகளுக்கு கம்பி கட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு மாலதி என்ற மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மல்லிபட்டினம் அருகே உள்ள நவக்கொல்லை என்ற ஊரில் உள்ள மாமானார் வீட்டுக்கு வந்துவிட்டு இரவு ஈசிஆர் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நாகூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் கேரளாவை சேர்ந்த ஜார்ஜ் ( வயது 22 ) , டொமினிக் ( வயது 21 ) ஆகிய இருவரும் அதே சாலையில் சேதுபாவாசத்திரம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

இரண்டு வாகனங்களும் மல்லிப்பட்டினம் அருகே வந்தபோது நேருக்குநேர் மோதியதில் அமர் கார்த்திக்குக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஜார்ஜ், டொமினிக் ஆகிய இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...