Pages

Tuesday, July 7, 2015

அதிரையில் தமாகா நடத்திய ஆலோசனைக்கூட்டம் !

அதிரை பேரூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அதிரை பேரூர் தலைவர் M.M.S அப்துல் கரீம் தலைமை வகித்தார். தமாகாவின் மாநில பொதுக்குழு உறுப்பினர் M.M.S பஷீர் அஹமது. தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அதிரை மைதீன், முன்னாள் எம்எல்ஏ கருப்பையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக தமாகாவின் மாநில செயலாளர் ஹாஜி ஜிர்ஜிஸ் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். தஞ்சையில் எதிர்வரும் ஜூலை 15 ல் நடைபெற இருக்கும் காமராஜர் பிறந்த தின விழா கூட்டத்தில் அதிரையிலிருந்து 20 வாகனங்களில் சென்று கலந்துகொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டம் துவங்குவதற்கு முன்னதாக தாமாகவின் கொடியை ஹாஜி ஜிர்ஜிஸ் ஏற்றி வைத்தார். கூட்ட முடிவில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக பொன்னம்பலம் நன்றி கூறினார். கூட்டத்தில் அதிரை பேரூர் தமாகாவினர் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...