Pages

Sunday, July 5, 2015

ஷமில் அகமதுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை: பவித்ரா பரபரப்பு பேட்டி !

ஆம்பூர் கலவரம் தொடர்பாக பிடிபட்ட பெண் பவித்ரா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், உயிரிழந்த ஷமில் அகமதுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், குச்சிபாளையத்தைச் சேர்ந்த கே.பழனி என்பவர் மனைவி பவித்ரா காணாமல் போன வழக்கில் ஆம்பூர் பூந்தோட்டம் பர்ணகாரத் தெருவைச் சேர்ந்த ஷாஜகானின் மகன் ஷமில் அஹமத் (26) என்பவரை விசாரணைக்க்கு போலீஸார் கடந்த 15ம் தேதி அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் ஷமில் அஹமத் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஷமில் அஹமத் கடந்த மாதம் ஜூன்.26 (வெள்ளிக்கிழமை) மாலை இறந்தார்.

இதைக் கண்டித்தும், அவரது உயிரிழப்புக்கு காரணமான காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் 130-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

இந்நிலையில், ஷமீல் அகமது வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், வேலூர் மாவட்டம் வள்ளிமலை அருகே காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பவித்ராவை, நேற்றிரவு தனிப்படை போலீஸார் சென்னையில் கண்டுபிடித்தனர்.

அவரை ராணிப்பேட்டை மேல்பாடி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீஸார், இத்தனை நாள் தலைமறைவாக இருந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து, பவித்ராவை வேலூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.

விசாரணைக்கு பின்னர் மகளிர் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

பின்னர் செய்தியர்களுக்கு அளித்த பேட்டியில், தனக்கும் ஷமில் அகமதுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.

நன்றி:தினமணி

2 comments:

  1. மக்கள் புரிந்துகொண்டால் சரியே
    இந்து இயக்கதலைவர்கள் எப்பொழுதும் எந்த சம்பவம் நடந்தாலும் உண்மையை தெரியாமல் இரு சமூகத்திற்கும் பகைமையை உ ருவாக்கி சமூக குழப்பத்தையே தங்களின் தொழிலாக செயல்படுவதை இனிலாவது நிறுத்தி கொள்ளட்டும். .

    ReplyDelete
  2. கொலைக்கு காரணமாக இருந்த பவித்ரா , மனைவியை காணவில்லை என்று பொய்யான புகாரை கொடுத்து கொலை செய்ய போலீசை தூண்டிய அவரது கணவர் பழனி , விசாரணை என்ற பெயரில் ஒருவரை கொலை செய்த போலீஸ் மார்டின் இவர்கள் மூவர் மீதும் கிரிமினல் வழக்கு தொடர்ந்து , ஒரு கொலை செய்தவனுக்கு என்ன தண்டனையோ அதை காலதாமதுமில்லாமல் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...