Pages

Thursday, July 16, 2015

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழுதாடை டிஜிட்டல் ஊடுகதிர் ஸ்கேன் கருவி !

தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சைத்துறையில் அதிநவீன முழுதாடை டிஜிட்டல் ஊடுகதிர் ஸ்கேன் கருவியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

ஊடுகதிர் ஸ்கேன் கருவியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் மாவட்ட தொடக்க நிலை இறையீட்டு சேவை மையம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பிறந்தது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்புகள் இருப்பதை கண்டறிந்து பரிசோதித்து பாதிப்புகள் இருந்தால் சிறப்பு சிகிச்சை வழங்கப்படும். இதற்கென மூன்று சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.  மருத்துவக்கல்லூரி முதல்வர், குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர், இம்மையத்தினை தொடர்ந்து கண்காணித்து வருவார்கள்.

பிறந்தது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பாதிப்புகள் இருப்பதை கண்டறியப்பட்டால் முன்னுரிமையளித்து தகுந்த சிகிச்சை அளிக்கப்படும். மேலும்ää அனைத்து பள்ளிகளுக்கும் நேரில் சென்று குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து தேவையான சிகிச்சையினை இம்மையத்தின் மூலம் வழங்கப்படும்.

உலகத்தில் 9 சதவிகித குழந்தைகள்  குறைபாடுகள் உள்ள குழந்தைகள் என கண்டறியப்பட்டுள்ளது.  குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக இம்மையம் தொடங்கப்பட்டுள்ளது.

அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தவும், கருவிகள் வாங்கவும், அரசு ரூ.1கோடி 5 இலட்சம் வழங்கியுள்ளது.  தேவைப்பட்டால் இந்நிதியில் கட்டிடமும் கட்டப்படும்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.12 இலட்சம் மதிப்பில் புதிய அதிநவீன முழுதாடை டிஜிட்டல் ஊடுகதிர் ஸ்கேன் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தாடை வாய் பகுதியில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து நவீன சிகிச்சை வழங்க இக்கருவி பயன்படும். இக்கருவி முழுமையாக டிஜிட்டல் முறையில் தாடைகளை ஸ்கேன் செய்து துல்லியாக படங்களை தெரிவிக்கக் கூடியது. சாலை விபத்துகளில் ஏற்படக்கூடிய தாடை எலும்பு முறிவுகளை கண்டறிவதற்கும், தாடை எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம்.  மேலும் தாடை நோய்கள் மற்றும் தாடையில் ஏற்படக்கூடிய நோய் கட்டிகளை கண்டறிந்து சிகிச்சைகளை வழங்க முடியும். பல்நோய்கள், பல்லின் வளர்ச்சி, புதைந்த பற்கள், ஈறு நோய்கள், முதலியவைகள் பதிவு  செய்து சிகிச்சை வழங்கலாம். சட்டம் சார்ந்த மருத்துவ துறையில் தாடையின் வளர்ச்சி மற்றும் பல்லின் நிலைகளை பதிவு செய்வதற்கும் வயதை கண்டறிவதற்கும் இக்கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சென்னை, கோவைக்கு பிறகு இந்த வசதி தஞ்சாவூரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் இவ்வசதியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.  தஞ்சாவ10ர் மருத்துவமனைக்கு இவ்வசதியை கொண்டு வந்த மருத்துவக்கல்லூரி முதல்வர் அவர்களுக்கும், பல் மருத்துவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பி.ஜி. சங்கரநாராயணன்,  சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணி, குழந்தைகள் நலத்துறை மருத்துவர் சிங்காரவேலு, பல் சிகிச்சைத்துறை தலைவர் டாக்டர் ராஜ்மோகன், கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.இளங்கோவன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...