Pages

Sunday, July 5, 2015

பவித்ரா மீட்பு !

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த பழனியின் மனைவி பவித்ரா கடந்த மாதம் 24–ந்தேதி திடீரென மாயமானார்.

இதுபற்றி பழனி பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் மற்றும் போலீசார் ஆம்பூரை சேர்ந்த ஷமில் அகமது என்பவரை அழைத்து விசாரித்தனர்.

விசாரணை முடிந்து திரும்பிய ஷமில் அகமது உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் இறந்தார். போலீசார் அவரை தாக்கியதாக அவரது உறவினர்கள் கூறினர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், சிறப்பு சப்–இன்ஸ் பெக்டர் சபாரத்தினம், போலீஸ்காரர்கள் முனியன், முரளி, அய்யப்பன், நாகராஜ், சுரேஷ் ஆகிய 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

ஆனால் ஷமில் அகமது சாவுக்கு காரணமான இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரி ஆம்பூரில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அது பயங்கர கலவரமாக மாறியது. பஸ், போலீஸ் வேன் தாக்கப்பட்டது. போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டனர். இது சம்பந்தமாக 125 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கலவரத்துக்கு காரணமான பவித்ரா பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. அதனால் அவரை மீட்க கோரி கணவர் பழனி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.

அதில் பவித்ரா எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த மே மாதம் 24–ந்தேதி வெளியில் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. புகழேந்தி, சரவணன் ஆகிய 2 பேரும் அவரை கடத்தி சென்று விட்டனர். அவர்களிடம் இருந்து மனைவியை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து பவித்ராவை கண்டு பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

பவித்ரா ஏற்கனவே வேலை பார்த்த நகை கடையில் விசாரணை நடத்தினர். அவர் பெங்களூரில் பதுங்கியுள்ளாரா என்று விசாரித்தனர். அதற்கு பலன் கிடைக்கவில்லை.

இதனால் பவித்ராவின் செல்போன் எண் மூலம் விசாரணையில் இறங்கினர். அப்போது சென்னை கோயம்பேடு பகுதியில் பவித்ரா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. நேற்று இரவு தனிப்படை போலீசார் சென்னை வந்தனர்.

கோயம்பேடு பஸ் நிலையம் அருகே பவித்ராவை தனிப்படை போலீசார் மீட்டனர். அவர் நேற்று இரவு வேலூர் கொண்டு வரப்பட்டார். ராணிப்பேட்டை அருகே உள்ள மேல்பாடி போலீஸ் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவித்ராவை தேடியபோது அவருடன் 2 வாலிபர்கள் செல்போனில் பேசியதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். வாலிபர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று சென்னையில் மடக்கி பிடித்தனர்.

அவர்கள் அரக்கோணத்தை சேர்ந்த சரவணன், சுரேந்திரன் என்று தெரிந்தது. அவர்களை அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

நாளை பவித்ராவை சென்னை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். அப்போது பவித்ரா கடத்தல் சம்பவத்தில் பரபரப்பு தகவல் வெளிவரும்.

பவித்ரா கடத்தல் பின்னணியில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? இவர்கள் பவித்ராவுடன் போனில் பேச என்ன காரணம் என்று விசாரித்து வருகின்றனர்.

பவித்ராவுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். அவள் அம்மா எங்கே எனக் கேட்டு அழுகிறாள். விரைவில் பவித்ராவை ஒப்படையுங்கள் என போலீசாரிடம் பழனி தெரிவித்துள்ளார்.

நன்றி: மாலை மலர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...