Pages

Friday, July 3, 2015

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து பயிற்சி முகாம் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக பாதுகாப்புத்துறை-மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து மருத்துவ அலுவலர்களுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கு.தர்மராஜன் சிறப்புரையாற்றினார்.

முகாமினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பேசியதாவது:
பல்வேறு இன்னல்களிலிருந்து பாதுகாப்பது குறித்து மருத்துவ அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்களுக்கு பல்வேறு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது நீண்ட நாட்களுக்கு பிறகு நிறைவேறுகின்றது. தவறு செய்தவர்கள் கடைசி வரை தவறு செய்யவில்லையென போராடுவார்கள். குழந்தைகளுக்கு இழைக்கப்படும் தீமைகளுக்கு மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினர் கண்ணால் பார்த்தாலே தவறு என்று உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க முடியும். குழந்தைகளுக்கு எதிரான தீமைகளுக்கு எவ்வாறு கையாண்டு தண்டனை வழங்க வேண்டும் என்பதற்கு இந்த பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  ஆண் பெண் இருபாலார் குழந்தைகளுக்கும் எந்தவிதமான தீங்கும் நேராக்கூடும் என்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  இது போன்ற சம்பவங்களுக்கு மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினர் துறை ரீதியான சான்றிதழ்கள் வேண்டுமென அலையவிடாமல் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளை எப்படி அணுக வேண்டும் என்பதற்கும் இந்த பயிற்சி முகாம் உதவிகரமாக இருக்கும்.

எல்லா குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கின்றது என்கின்ற நிலை ஏற்பட வேண்டும்.  குழந்தைகள் பாதிப்பு தொடர்பாக 60 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது.  அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதே சமயம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனதில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் அவர்கள் மனதில் ஒரு நம்பிக்கை ஏற்பட துறை அலுவலர்கள் பாடுபட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இத்திட்டம் குறித்து 2013ம் ஆண்டில் திறன் வளர்ப்பு பயிற்சி மூலம் 340 அலுவலர்களுக்கும், கிராம அளவில் விழிப்புணர்வு பயிற்சி மூலம் 4180 பேருக்கும், பள்ளி குழந்தைகளுக்கு 2000 பேருக்கும், 2014ம் ஆண்டு திறன் வளர்ப்பு பயிற்சி மூலம் 800 அலுவலர்களுக்கும், கிராம அளவில் 990 பேருக்கும், பள்ளி குழந்தைகளுக்கு 1500 பேருக்கும் அரசு பொருட்காட்சி மூலம் 8000 பேருக்கும், ஆக மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு திறன் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தில் மருத்துவ சாட்சி இன்றியமையாதது.  பாதிக்கப்பட்ட குழந்தை களின் சாட்சியத்தோடு மருத்துவ சாட்சியத்தை ஒப்பிட்டு உறுதிபடுத்தப்பட வேண்டும் என்பது அவசியம் என்பதால் மருத்துவ சாட்சி மிகவும் இன்றியமையாதது.  எனவே மருத்துவர்களுக்கு இச்சட்டத்தினை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமானதாக உள்ளது.  இச்சட்டத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தையினை பரிசோதனை செய்திட காவல் துறையில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை பெற்ற பின்னர் தான் பரிசோதனை செய்திட வேண்டும் என்றோ அல்லது நீதித்துறை நடுவர் சுநஙரநளவைழைn கொடுத்து தான் பரிசோதனை செய்திட வேண்டும் என்றோ இல்லை.  அவ்வாறான நேரம் கடந்தால் சாட்சியங்கள் அழிந்துவிடும். பெற்றோர்களோ உறவினர்களோ தங்களது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி  பரிசோதனை செய்திட வேண்டும் என்று கோரினால் மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பேசினார்.

முகாமில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.நா.நடராஜன், சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் த.மீனாட்சி, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பி.ஜி.சங்கரநாராயணன், குழந்தைகள் நலக்குழு தலைவர் திரு.சி.திலகவதி, சைல்டுலைன் இயக்குநர் திரு.பி.பாத்திமாராஜ், பாதுகாப்பு அலுவலர் திரு. டி.அசோக் மற்றும் மருத்துவர்கள், காவல் துறை அலுவலர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...