Pages

Saturday, July 11, 2015

டெங்கு கட்டுப்பாடு பணிகள் தீவிரம்: வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அறிவழகன் தகவல் !

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் டெங்கு கட்டுப்பாடு முன்னேற்பாடுகள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்திரவுப்படியும், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர்.ஆ.சுப்பிரமணி அவர்கள் வழிகாட்டுதல் படியும், பட்டுக்கோட்டை வட்டாரப்பகுதியில், பொது சுகாதாரத்துறை சார்பில் டெங்கு கட்டுப்பாட்டு முன்னேற்பாடுப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பட்டுக்கோட்டை வட்டாரத்திலுள்ள, தாமரங்கோட்டை, நாட்டுச்சாலை, இராசாமடம், நம்பிவயல், ஏனாதி, கரம்பயம், அரசினர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் வெளி நோயாளிகளில் காய்ச்சல் நோயாளிகள், அரசினர் மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் காய்ச்சல் நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு, அப்பகுதிகளுக்கு வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில், மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், தற்காலிக களப்பணியாளர்கள் சென்று அப்பகுதிகளில் வேறு எவரேனும் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று ஆய்வு செய்து வருகின்றனர். கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்படுகின்றன.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ஜி.அறிவழகன் தலைமையில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பொதுப்பணித் துறையின் கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் ஆகியோரை கொண்டு டெங்கு ஒழிப்பு ஒருங்கிணைப்பு கூட்டமும் பின்னர் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலர், குடிநீர் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி, கல்லூரி தன்னார்வ தொண்டு மாணவர்கள், லயன்ஸ், ரோட்டரி, ஜே.சி.ஐ. போன்ற தன்னார்வ தொண்டு அமைப்புகள், கட்டுமான பொறியாளர்கள் ஆகியோர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஒழிப்புணர்வு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளன.

உள்ளாட்சி அமைப்பு மூலமாக பட்டுக்கோட்டை ஊராட்சி பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலம், அவரவர் நிறுவனங்களிலும் ஒட்டுமொத்த தூய்மைப்பணி கொசுப்புழு ஒழிப்பு பணி, முதிர்வு கொசுக்களை ஒழிக்க புகை மருந்து அடித்தல் பணி நடைபெற்று வருகிறது.  பொது சுகாதாரத்துறை, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி சார்பில் தற்காலிக கொசுப்புழு பரிசோதகர்கள், நியமிக்கப்பட்டு காய்ச்சல் கண்காணிப்பு, கொசுப்புழு ஒழிப்பு பணி நடைபெறுகிறது.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு கூட்டங்கள், ஊர்வலங்கள், வீடியோ திரைப்பட நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களிலும் நிலவேம்பு குடிநீர் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன. இப்பணிகள் சிறப்பாக நடைபெற பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி ஆரோக்ய வாழ்வு பெற அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். டெங்கு ஒழிப்பு பணியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ.விவேகானந்தம், சுகாதார ஆய்வாளர்கள் சா.சந்திரசேகரன், கா.பாஸ்கரன், எஸ்.வி.முத்துச்சாமி, வி.ரவிச்சந்திரன், கே.காசிநாதன், எஸ்.வெங்கடேஷ் ஆகிய குழுவினர் கிராமங்கள் தோறும் சென்று டெங்கு ஒழிப்பு பணி செய்து வருகின்றனர். மேற்கண்ட தகவலை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.கு.அறிவழகன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...