Pages

Monday, July 6, 2015

அதிரை கவுன்சிலரின் பசுமை புரட்சி !

அதிரை பேரூராட்சியின் 15 வது வார்டு கவுன்சிலராக பொறுப்பு வகிப்பவர் அப்துல் லத்திப். தனக்கு கிடைக்கும் நேரங்களை பயனுள்ள வகையில் பொதுநல சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருபவர்.

இவரது வார்டு பகுதிகளில் ஆங்காங்கே மண்டிக்கிடக்கும் முட்புதர்களால் வாகன ஓட்டிகளும், அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் அவதியுற்று வந்தனர். நமது பகுதியை நாமே சுத்தப்படுத்தினால் என்ன ? என எண்ணிய கவுன்சிலர் அப்துல் லத்திப். தனது வீட்டில் இருந்த அருவாளை கையில் எடுத்துக்கொண்டு கூடவே பேரூராட்சி துப்புரவு ஊழியர் ஒருவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு மண்டிக்காணப்படும் முட்புதர் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்முரமாக ஈடுபட்டார். இதன் விளைவால் தற்போது இந்த பகுதி முழுவதும் தூய்மையாக காட்சியளித்து வருகிறது. இந்த பாதை வழியே பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் நடந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பசுமையை வலியுறுத்தி தனது சொந்த செலவில் மரங்கள் நடும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக சாலையோரம், மக்கள் அதிகம் கூடுமிடம் ஆகிய பகுதிகளில் மக்களுக்கு பயன் தரக்கூடிய வேம்பு, புங்கை உள்ளிட்ட மரங்களை நட்டு வருகிறார். ஆடு, மாடுகளிடமிருந்து பாதுகாத்துகொள்ள கன்றைச்சுற்றி இரும்பு வலையால் தடுப்பு வேலி அமைத்துள்ளார். மேலும் தினமும் மரக்கன்றுகளை பராமரிக்க அப்பகுதியின் ஆர்வலர்களை ஏற்பாடு செய்துள்ளார். இவரது முயற்சிக்கு அன்வர், ஃபரோஸ் ஆகியோர் உடனிருந்து உதவி வருகின்றனர்.

எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இவர் ஆற்றி வரும் பொதுநலப் பணியை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இவரைப்போன்று அதிரையின் பிற பகுதிகளின் வார்டு கவுன்சிலர்களும் அதிக ஈடுபாட்டோடு பொதுநலப்பணி ஆற்ற முன்வர வேண்டும்' என கேட்டுக்கொண்டனர்.
 
 
 
 

5 comments:

 1. கௌன்சிலர் என்று சொன்னால் இப்படி தான் என்று இவரு விளங்குகிறார் மற்றவர்களுக்கு, மரம் வளர்ப்பு தொடர்ந்து செயல் பட்டால் கண்டிப்பாக பசுமையாக இவருடைய தொகுதி விளங்கும். சோலைவனமாக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. கௌன்சிலர் என்று சொன்னால் இப்படி தான் என்று இவரு விளங்குகிறார் மற்றவர்களுக்கு, மரம் வளர்ப்பு தொடர்ந்து செயல் பட்டால் கண்டிப்பாக பசுமையாக இவருடைய தொகுதி விளங்கும். சோலைவனமாக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. பணிகள் தொடரட்டும் அல்லாஹ் உங்களுக்கு இரு உலகிலூம் நன்மையை தருவா னா கவும் ஆமீன்.

  ReplyDelete
  Replies
  1. சலவைக்கு FAE சோப்பு தூள் வாங்கி பயன் பெருங்கள்

   Delete
 4. http://4.bp.blogspot.com/-viA3rsaIAT0/VWQs3AsF5-I/AAAAAAAAABc/k4Oel_kmVIk/s1600/FAE%2Bdetergent%2Bpowder%2B%25282%2529.jpg

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...