Pages

Saturday, July 11, 2015

முத்துப்பேட்டை மாணவியின் புதிய கண்டுபிடிப்பு !

முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆர்த்தி. இவர் செங்கல்களை எளிய முறையில் வார்க்கும் கருவியை வடிவமைத்து கண்டுப்பிடித்துள்ளார். இந்த கருவியில் இரண்டு வீல் பொருத்தப்பட்டு அதில் செங்கல் தயாரிக்க தேவையான களி மண்களை கொட்ட டப்பா போன்ற ஒரு பகுதியை உருவாக்கி அதில் களி மண்ணை கொட்டி கையால் தள்ளினால் தானாக கீழ் பகுதியிலிருந்து களி மண் செங்கல் வடிவத்தில் நீளமாக வருகிறது. அதில் ஒரு பகுதியில் அளவுக்கு ஏற்றது போல் செங்கல் அறுத்து பிரியும் போன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதன் செயல் விளக்க நிகழச்சி ஆலங்காடு செங்கல் சூளை பகுதியில் மாணவி செய்து காட்டினார். இதில் செங்கல் சூளை தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் ஆர்வத்துடன் மாணவியின் கண்டுபிடிப்பைப் பார்த்து வியந்தனர். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் ஆண்டனி அந்தோனி ராஜ், ஆசிரியர்கள் செல்வ சிதம்பரம், சாமிநாதன் ஆசிரியை முத்துலெட்சுமி மற்றும் கிராம மக்கள் கலந்துக் கொண்டு மாணவி ஆர்த்தியைப் பாராட்டினர். மாணவி ஆர்த்தி கண்டுபிடித்த இந்த கருவி நாளை 11-ம் தேதி மன்னார்குடியில் நடைபெற உள்ள மாவட்ட அளிவிளான புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் இடம் பெற இருக்கிறது.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
 

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    சங்கை மிகு சஹர் ரமலான்.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

    ReplyDelete
  2. மிக மகிழ்ச்சியாக உள்ளது தமிழர்கள் அறிவியல் சாதனைகள் புரியும்போது உலகம் நம்மை திரும்பி பார்க்கும். குறைந்த செலவில் உங்கள் சாதனைகள் மக்களுக்கு பயன் படவேண்டும். அரசிடமிருந்து உங்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க மாணவி ஆர்த்திக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...