Pages

Tuesday, July 7, 2015

ப்ளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் பணி: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு !

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டத்தில் இயங்கும் இசேவை மையத்தில் நடைபெற்று வரும் ப்ளாஸ்டிக் ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

செய்தியாளர்கள் சுற்றுப் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தஞ்சாவ10ர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இம்மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் காலை 9.45 மணி முதல் 5.45 மணி வரை செயல்படுகிறது.  பொது மக்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று அரசின் சேவைகளை பெறலாம்.

இச்சேவை மையங்களில் வருமானச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், முதலமைச்சரி பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், திருமண நிதியுதவித் திட்டம் போன்றவைகளுக்கு பொது மக்கள் இச்சேவை மையங்கள் மூலம் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கனவே விண்ணப்பம் செய்து, கருவிழி மற்றும் கைரேகைகளை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றவர்கள் பொது இ-சேவை மையங்களுக்குச் சென்று, ஒப்புகைச் சீட்டில் உள்ள 14 இலக்க பதிவு எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம். ஒப்புகைச் சீட்டு பதிவு எண்ணை பயன்படுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ரூ.40 கட்டணமாக வசு10லிக்கப்படும்.  ஏற்கனவே ஆதார் எண் கிடைக்கப் பெற்றவர்கள் பிளாஸ்டிக் ஆதார் ;அட்டை பெற விரும்பினால் ஆதார் எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம்.  இதற்கு ரூ.30 கட்டணமாக வசு10லிக்கப்படும்.  பொது மக்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், தஞ்சாவ10ர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் இசேவை மையங்களின் மூலம் 24.02.2015 முதல் 06.07.2015 வரை 14701 நபர்களுக்கு வருமானச் சான்றுகளும், 9345 நபர்களுக்கு வகுப்புச் சான்றிதழ்களும், 7748 நபர்களுக்கு இருப்பிடச் சான்றுகளும், 1721 நபர்களுக்கு முதல் பட்டதாரி சான்றுகளும் வழங்கப்பட்டுள்ளது.   1766 நபர்கள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்திற்கும், 20 நபர்கள் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்பு திருமண நிதி உதவித் திட்டத்திற்கும், 6 நபர்கள் ஈவெரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண உதவித் திட்டத்திற்கும், 28 நபர்கள் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்திற்கும், 17 நபர்களுக்கு அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டத்திற்கும், 17 நபர்கள் சிவகாமி பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கும், 1 நபர்  டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவி திட்டத்திற்கு ஆக மொத்தம் 35455 பேர்கள் பயன் அடைந்துள்ளனர்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சுற்று பயணத்தின் போது திருவையாறு வட்டாட்சியர் திரு.துரைராஜ், கேபிள் டிவி வட்டாட்சியர் திரு.கஜேந்திரன், திருவையாறு பேரூராட்சி தலைவர் திரு.செந்தில்மணி, செயல் அலுவலர் திரு.மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...