Pages

Sunday, July 12, 2015

பட்டுக்கோட்டை பகுதிகளில் பொது சுகாதார துறையினர் திடீர் ஆய்வு !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்திரவுப்படியும், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர். ஆ.சுப்பிரமணி அவர்கள் வழிகாட்டுதல்படியும் பட்டுக்கோட்டை வட்டாரப் பகுதிகளில், பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், புகையிலை கட்டுப்பாட்டு சட்டம் 2003 விதிகளின்படி வியாபாரம் செய்யாத கடை உரிமையாளர்கள் மீது பொது சுகாதார துறை சார்பில் திடீர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

09.07.2015 அன்று பட்டுக்கோட்டை வட்டாரம், பொன்னவராயன்கோட்டை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அணைக்காடு, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். கு.அறிவழகன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ.விவேகானந்தம், சுகாதார ஆய்வாளர்கள் எஸ்.வி.முத்துசாமி, எஸ்.சந்திரசேகரன், கே.பாஸ்கரன், வி.ரவிச்சந்திரன், கே.காசிநாதன், எஸ்.வெங்கடேஷ் மற்றும் காவல்துறையினர் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ரூபாய் 1800 அபராதம் விதிக்கப்பட்டு, கருவூலத்தில் அரசு கணக்கில் சேர்க்கப்பட்டது.

புகையிலை பயன்பாட்டின் தீமைகள் பற்றி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். கு.அறிவழகன் பேசும்போது,
“மெல்லும் வகை புகையிலையில் 3000 வகையான நச்சுப்பொருட்களும் மற்றும் பீடி, சிகரெட், சுருட்டு போன்ற புகைக்கும் வகை புகையிலையில் 4000 வகையான நச்சுப்பொருட்களும் உள்ளது. இதில் 200 வகையான நச்சுப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்க கூடியவை. ஒருவர் ஒரு சிகரெட்டை முழுமையாக பிடித்து முடிக்கும் போது அவரது வாழ்நாளில் 14 நிமிடங்கள் குறைகிறது.

மெல்லும் வகை புகையிலையை பயன்படுத்துவதன் மூலம் 90 சதவீதம் வாய்ப்புற்றுநோயும், புகைக்கும் வகை புகையிலையை பயன்படுத்துவதன் மூலம் 90 சதவீதம் நுரையீரல் புற்றுநோயும் ஏற்படுகிறது. புகையிலை பயன்படுத்துவதால் ஆண்களிடையே ஆண்மை குறைவும், பெண்களிடையே மலட்டுத்தன்மையும் ஏற்படுகிறது. புகைப்பிடிப்பவருக்கு ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் புகைப்பிடிப்பவரின் அருகில் இருப்பவர்களுக்கும் ஏற்படுகிறது.

இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு 2500 பேர் புகையிலை காரணமாக நோய்களால் பலியாகிறார்கள். ஒரு வருடத்திற்கு 10 லட்சம் பேர் புகையிலை காரணமான நோய்களினால் இறக்கின்றனர்.

கருவுற்ற பெண்கள் அருகில் புகைப்பிடிப்பதால் தாயும் கருப்பையில் வளரும் சிசுவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எனவே புகையிலை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

புகையிலை கட்டுப்பாட்டு சட்டம் 2003ன் படி பொது இடங்களில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது (சட்டப்பிரிவு&4), புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்தவோ அல்லது உபயோகிக்க ஊக்கப்படுத்துவதோ தடை செய்யப்பட்டுள்ளது (சட்டப்பிரிவு & 5), 18 வயதுக்குட்பட்டவர்கள் புகையிலை பொருட்களை வாங்கவோ விற்கவோ தடைசெய்யப்பட்டுள்ளது. (சட்டப்பிரிவு 6ஏ), கல்வி நிறுவனங்களின் 300 மீட்டர் சுற்றளவிற்கு புகையிலை பொருட்களை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது (சட்டப்பிரிவு 6 பி ), புகையிலை பொருட்கள் மீது படத்துடன் கூடிய எச்சரிக்கை வெளியிடப்பட வேண்டும். (சட்டப்பிரிவு 7)” என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...