Pages

Sunday, July 26, 2015

வெடித்த கொதி நீர் குழாய் வெந்துபோன சபியா !

எந்த நோயாக இருந்தாலும் ஏழை எளிய மக்கள் நாடிச் செல்வது அரசு மருத்துவமனைகளைத்தான். அந்த அரசு மருத்துவமனைகளின் நிலையோ மிக மோசமான சூழ்நிலையில் இருக்கின்றன.

ஆரோக்கியமற்ற சூழல், போதிய உபகரணங்கள் இல்லாத நிலை; மருத்துவர்களின் பற்றாக்குறை, மருத்துவர்கள் இருந்தும் அவர்கள் நோயாளிகளிடம் காட்டும் அலட்சிய மனப்பான்மை போன்றவை ஒருபுறம் என்றால், இன்னொ ருபுறம் அரசு மருத்துவமனைகள் உயிருக்கே ஆபத்தானவையாக மாறுகின்றன!

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் சாதிக் பாட்சா. இவரது மனைவி சபியா பேகம் என்பவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரை "பத்மாவதி ஹாஸ்பிடா லிட்டி & ஃபெசிலிட் டீஸ் மேனேஜ்மென்ட் சர்வீஸ்' என்ற ஒப்பந்த நிறுவனம் பணியாளராக வேலைக்கு அமர்த்தியிருந்தது.

கடந்த மே மாதம் 27ம் தேதி சபியா பேகம் பணியிலிருந்த போது, முட நீக்கியல் பிரிவின் கழிவறையின் மேற்கூரையிலி ருந்து கொதி நீர் செல்லும் குழாய் வெடித்ததில் சிதறிய கொதி நீர் சபியாவின் உடலில் பட்டு உடலின் பாதி பாகம் வெந்து போனது.

அதே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப் பட்ட சபியாவிற்கு சுமார் 18 நாட்கள் சிகிச்சையளிக்கப் பட்டது. இவரது மருத்துவ அறிக்கை, உடலில் 35 சதவீ தம் வெந்து போய் விட்டது என்கிறது.
"கொதி நீர் குழாய் வெடித்து - சபியாவின் உடல் வெந்து போன செய்தி மீடி யாக்களில் வெளி வராமல் பார்த்துக் கொண்டது மருத்து வமனை நிர்வாகம்.
சபியாவை டிஸ்சார்ஜ் செய்த போது, உங்க ளுக்குத் தேவை யான இழப்பீட்டை பெற்றுத் தருகிறோம் என என் மனைவி சபியா பேகத்திடம் பேசி ஒப்புக் கொள்ள வைத்தது மருத்துவ மனை நிர்வாகம்.

தான் வேலை பார்க்கும் மருத் துவமனைதானே... தனக்கு கண் டிப்பாக உதவி செய்யும் என்ற எண்ணத்தில் உடல் காயங்களை பொருட் படுத்தாமல் டிஸ்சார்ஜ் ஆனார் சபியா. ஆனால் சொன்னபடி மருத்துவ மனை நிர்வாகம் நடந்து கொள்ளவில்லை.

நோயாளி டிஸ்சார்ஜ் ஆகி விட்டார்; இனி அவருக்கும் நமக்கும் சம்மந்தமில்லை என்ற ரீதியில் கழற்றிக் கொள் ளப் பார்க்கிறது...'' என்கிறார் சபியாவின் கணவர் சாதிக் பாட்சா.

தொடர்ந்து அவர், ""18 நாட்கள் உள் நோயா ளியாக என் மனைவி அனுமதிக் கப்பட்டிருந்த நிலையிலும் அவ ருக்கான மருந்து செலவுகள் சுமார் 25 ஆயிரம்வரை நாங்கள் தான் கொடுத்தோம். இந்த விபத் திற்கு முழுமுதற் காரணமே பராம ரிப்பில் மருத்துவமனை காட்டி வருகின்ற அலட்சியம்தான். பாதிக்கப்பட்ட என் மனைவி இந்த மருத்துவமனை யில்தானே சேவை செய்தார். அவருக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தராமல் மருத்துவமனை நிர்வாகம் நழுவு வது நியாயமா?'' என நம்மிடம் கேள்வியெழுப்புகிறார் சாதிக்!

இந்த சம்பவத்திற்கு வழக்குப் பதிவு செய்து எஃப்.ஐ.ஆர். (எண் 5/2015) போட்ட கீழ்ப்பாக்கம் மருத்துவமனை காவல்துறை, இன்றைய தேதி வரை அதற்கான காரணத்தை கண்டுபிடித்த தாகத் தெரியவில்லை.

"சபியாவை ஒப்பந்த ரீதியில் பணியில் அமர்த்திய பத்மாவதி ஒப்பந்த நிறுவனமோ சபியா விற்கு தர வேண்டிய 2 மாத சம்ப ளம்கூட தராமல் வஞ்சித்து வரு கிறது...'' என்று கூறும் சாதிக் பாட்சா, "சாபியாவிற்கு பத்மா ஒப் பந்த நிறுவனம் மூலம் போடப் பட்ட இன்ஷுரன்ஸ் கடந்த 18-04-2014ல் முடிந்து விட்டதால் அவசர அவசரமாக சம்பவம் நடந்த நான்கு நாட்கள் கழித்து இன்ஷுரன்ஸ் வேலிடிட்டியை 30 செப்டம்பர் 2015 வரை இருக்கும் வகையில் கையால் எழுதி சீல் அடித்துக் கொடுத்தி ருக்கிறது.

இதன் மூலம் பாதிக் கப்பட்ட பெண் இன்ஷுரன்ஸ் கிளைம் பண்ணிக் கொள்ளப்படும் என்று தனது பொறுப்பிலிருந்து கழன்று கொள்ளப் பார்க்கிறது...'' என்கிறார் சாதிக்.

பத்மாவதி ஒப்பந்த நிறுவனத்திடம் சாதிக் பாட்சா இது குறித்து கேட்டபோது, தனக்கு முதல்வர் வரை செல்வாக்கு இருக்கிறது என அந்த ஒப்பந்த நிறுவனத்தின் சார்பாக பேசிய நபர் சொன்னதாகவும் ஒரு தகவலை நம்மிடம் கூறினார் சாதிக் பாட்சா.

முதல்வரின் தனிப் பிரிவு, மனித உரிமை ஆணையத்திற்கு மனுக் களை அனுப்பி விட்டு காத்திருக்கும் சாதிக் பாட்சா, நீதிமன்றத் தில் வழக்கு தொடுக் கும் முடிவில் இருக்கிறார்.

நாம் பத்மாவதி ஒப்பந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு சாதிக் பாட்சாவின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டோம்.
நம்மிடம் பேசிய அந்த ஒப்பந்த நிறுவனத்தின் ஹெச்.ஆர். ஹேம்நாத், "சார் நாங்கள் எங்கள் தரப்பிலிருந்து பணம் கொடுத்திருக்கிறோம். இது மருத்துவமனை ஆர்.எம்.ஏ.க்கும் தெரியும். அந்தம்மா சேஃப்டி இல்லாமல் வேலை செய்திருக்காங்க. அந்த சம்பவம் நடந்து விட்டது. என்றாலும் எங்களிடம் வேலை செய்பவருக்கு நாங்கள்தானே உதவி செய்ய வேண்டும். அவ ருக்கு இ.எஸ்.ஐ ( Employees State Insurance ) செய்து கொடுத்திருக்கிறோம்.
பணம் கொடுத்திருப்பது ஹாஸ்பிடலில் கேட்டால் தெரியும். ட்ரீட்மெண்ட் செலவுக்காக கொடுத்திருக்கிறோம். லீவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளச் சொன்னோம். இ.எஸ். ஐ.க்கும் எழுதிக் கொடுத்திருக்கிறோம். இ.எஸ்.ஐ.யிலிருந்து பணம் தரவில்லை என்றால் கம் பெனியிலிருந்து தருவோம் என் றும் சொல்லியிருக்கிறோம்.

அவருக்கு இரண்டு மாத சம்பளம் போடச் சொல்லியிருக்கிறோம். பொறுப்பு மேனேஜரிடம் சபியா முழு மாதம் பணி செய்ததைப் போல குறிப்பு போட்டு அனுப்பச் சொல்லியிருந்தோம். ஆனால், மேனேஜர் புதிதாக பொறுபேற்றிருக்கிறார். அவர் சாபியா வேலையில் இல்லை. லீவில் இருக்கிறார் என்பது மாதிரி குறிப்பிட்டிருப்பதால் சம்பளம் தர சின்ன தாமதம் ஆகிறது. புது மேனேஜர் என்பதால் அவருக்கு விஷயம் தெரியவில்லை.
சம்பளம் போட்டு கொடுத்து விடுவோம். அதில் ஒன்றும் பிரச்சினை இல்லையே. அந்தம்மாவின் கணவர் என்னிடம் பேசி விட்டுத்தானே போனார். இ.எஸ். ஐ.க்கு எழுதிக் கொடுத்து பணம் வாங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் தரவில்லை என்றால் கம்பெனி தரும் என்று அவரிடம் சொன்னோமே...'' என்று விளக்கமளித்த ஹேம்நாத், ""மற்றபடி முதல்வரிடம் செல்வாக்கு என்று சொல்வதெல்லாம் மிகைப்படுத்தல்கள். நாங்கள் அப்படி சொல்ல வில்லை. அந்தம்மாவின் கணவர் பெரிய தொகை எதிர்பார்க்கிறார் போல. அவருக்கு என்ன தூண்டுதல் என்று தெரியவில்லை. திடீரென்று இப்படி (கம்ப்ளெண்ட்) பண்ணியிருக்கார். ஆனால், இந்த மாதிரி இ.எஸ். ஐ., பி.எஃப். மெயின்டைன் பண்ணும் கம்பெனிகள் பெரும் தொகை எதுவும் கொடுக்காது. அப்படியிருந்தும் எங்கள் அலுவலகத்திலிருந்து செலவுக்காக ஏதோ கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அது எவ்வளவு தொகை என்பது எனக்குத் தெரியாது. செலவுக்கு கொடுத்திருக்கிறார்கள்...'' என்று நிதானமாக விளக்க மளித்தார் ஹேம்நாத்.

தொடர்ந்து இது குறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ. டாக்டர். ராஜ்குமாரி டம் பேசினோம்.
"அந்த சம்பவம் நடந்து நாங் கள் எல்லாம் சென்று பார்த் தோம். அந்தம்மாவை அட்மிட் செய்து நல்ல சிகிச்சையளித்து சரி பண்ணியிருக்கிறோம். அந்தம்மாவிற்கு இப்போது ரெஸ்டு எடுக்கச் சொல்லியிருக்கிறோம். மீண்டும் வேலைக்கு வரும் வரைக்குமான சம்பளம் கொடுத்து விடுவதாகவும் சொல்லியிருக் கிறோம். அதாவது இந்த் தொகையை ஒப்பந்த நிறுவ னம் கொடுத்து விடும். கை செலவிற்காக 5000 ரூபாய் தருகிறோம் என ஒப்பந்த நிறுவனத்தினர் சொல்கிறார்கள்.

சபியாவின் கணவரை அழைத்து அவர்கள் தரும் 5000 ரூபாயை இப்போதைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று நானும் அவரிடம் சொன்னேன். என்னிடம் சரி என்று சொல்லி விட்டு அங்கே போய் "ரொம்ப கம்மியாக இருக்கிறது' என்று கூறி அவர் வாங்க வில்லைபோல. இதுதான் பிரச்சினை, ஒப்பந்த நிறுவனத்தின் இ.எஸ்.ஐ. பிராஸஸ் செய்கிறார்கள். அது கொஞ்சம் தாமதமாகிறது...'' என்ற டாக்டர் ராஜ்குமாரிடம்,

"உங்கள் மருத்துவம னையில் சேவையாற்றிய ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற வகையில் அவருக்கு இழப்பீட்டைப் பெற்றுத் தருவது மருத்துவ மனை நிர்வாகத்தின் தார்மீக பொறுப்பில்லையா?'' என்றோம்.

"நாங்கள் இதில் என்ன செய்ய முடியும்? அவர்கள் ஒப்பந்தப் பணியாளர்கள். நாங்கள் நல்ல வார்ட்டில் அட்மிட் பண்ணி சிறப்பான டாக்டர்களை வைத்து ட்ரீட்மெண்ட் கொடுத்தோம். இதுதான் எங்களால் செய்ய முடி யும். மற்றபடி ஒப்பந்த நிறுவனம்தான் அவர்களை கவனிக்க வேண்டும். எங்க லெவலில் நல்ல படியாக பார்த்து டிஸ்சார்ஜ் பண்ணியிருக்கோம். வேறு என்ன சார் நாங்க இதில் பண்ண முடியும்?'' என்றவரிடம் மீண்டும்,

"கொதி நீர் குழாய் உடைந்து சபியா பாதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவமனையின் பராமரிப்பு குறைபாடுகள்தான் இதற்கு காரணமா?'' என்றோம்.

"இல்லை சார். ஒரு பைப் இருந்தது. கொஞ்சம் டேமேஜ் கண்டிசனில் அதை இரும்புப் பைப்பாக மாற்றி இனி மேல் இப்படி நடக்காத மாதிரி ஏற்பாடு பண்ணியிருக்கோம்...'' என்று பதில் சொன்ன டாக்டர் ராஜ்குமார்,
"நான் மேற்கொண்டு இ.எஸ்.ஐ. மூலம் என்ன பண்ண முடியுமோ அந்த உதவியை சபியா தரப்பிற்கு பண்ணித்தருகிறேன்...'' என்றார் நம்மிடம் உறுதியாக!

ஃபைஸ் பைசல்
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...