Pages

Sunday, July 5, 2015

அதிரை பேரூராட்சிக்கு எஸ்டிபிஐ கட்சியின் வேண்டுகோள் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு பகுதி சிஎம்பி லேன், புதுமனைத்தெரு குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீரை சீராக கொண்டு செல்ல பேரூராட்சி பொது நிதி ₹ 10 லட்சம் மதிப்பில், 300 மீட்டர் நீளத்தில் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கழிவு நீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டி எடுக்கப்பட்ட மணல் சாலையில் கொட்டப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், இவற்றை உடனடியாக அப்புறப்படுத்த அதிரை பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிரை எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் கூறுகையில்...
பேரூராட்சி சார்பில் புதுமனைத்தெருவில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீரை கொண்டு செல்வதற்காக வடிகால் அமைக்கும் பணி கடந்த ஒரு வாராமாக நடைபெற்று வருகிறது. இதில் பழைய வடிகால் வாய்க்காலிலிருந்து தோண்டப்பட்ட கழிவு மணல்களை புதுமனைத்தெரு சாலையில் கொட்டப்பட்டுள்ளதால். அருகே உள்ள பள்ளிக்கு தொழுகைக்காக வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக நேற்று இரவு பள்ளியில் பொது அறிவிப்பு செய்யப்பட்டது. இதில் கழிவு மணல்களை உடனடியாக அப்புறப்படுத்த அதிரை பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இன்று தொடர இருக்கும் கட்டுமான பணியை நிறுத்தி விட்டு அப்பகுதியில் தேங்கி காணப்படும் கழிவு மணலை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள ஊழியர்களை கேட்டுக்கொள்ள இருப்பதாக கூறினார். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...