Pages

Monday, July 13, 2015

கள்ளக்காதல் விவகாரம்: பெண் கொன்று புதைப்பு; எலக்ட்ரீஷியன் கைது !

முத்துப்பேட்டையை அடுத்த கோபாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இறால் பண்ணைத் தொழிலாளி பூமிநாதன். இவரது மனைவி கலாவதி (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கலாவதியின் நடவடிக்கை சரியில்லாததால் பூமிநாதன் நீண்ட நாட்களாக வீட்டுக்கு வருவதில்லையாம். இந்நிலையில், கடந்த 6-ம் தேதி முதல் கலாவதியை காணவில்லையாம். இதுகுறித்து கடந்த 9ஆம் தேதி முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் அவரது மருமகன் புகார் அளித்தார். போலீஸார் கலாவதியைத் தேடி வந்தனர்.

போலீஸாரின் விசாரணையில் கலாவதிக்கு ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீஷிசியன் தென்னரசு (40) என்பவருடன் தொடர்ப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தென்னரசிடம் கடந்த 3 தினங்களாக போலீஸார் விசாரணை நடத்தினர்.

போலீஸாரிடம், கலாவதிக்கும் தனக்கும் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்பு இருந்ததாகவும், இந்நிலையில், கலாவதிக்கு வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்து கோபாலசமுத்திரம் ரயில்வே பாலத்தின் கீழே கலாவதியை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை சாக்கில் கட்டி தனது இரு சக்கர வாகனத்தில் எடுத்து வந்து ஆலங்காட்டில் உள்ள தனது வீட்டு தோட்டத்தில் புதைத்தாக தெரிவித்தார்.

இதையடுத்து, முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருண், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நதியா, திருத்துறைப்பூண்டி தாசில்தார் ஜமுனா ராணி, தடயவியல் நிபுணர் அவினா ஆகியோர் முன்னிலையில் தென்னரசின் வீட்டில் புதைக்கப்பட்ட கலாவதியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் மருத்துவப் பரசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சடலம் அனுப்பிவைக்கப்பட்டது. தென்னரசைக் கைது செய்த முத்துப்பேட்டை போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...