Pages

Thursday, July 9, 2015

முன்னறிவிப்பின்றி காஸ் இணைப்பை கொள்ளுக்காடு ஏஜென்சிக்கு மாற்றியதால் பொதுமக்கள் அதிருப்தி !

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பட்டுக்கோட்டை சாலையில் செயல்படும் பாலு இன்டேன் காஸ் நிறுவனம் மூலம் காஸ் இணைப்பை பெற்று வீட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் காஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்து பெற்று வருவார்கள். இந்த நிறுவனம் மூலம் அதிரை மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய கிராமப் பகுதிகள், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 15,000 இணைப்புதாரர்கள் வாடிக்கையாளர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிரை மற்றும் இதன் அருகில் உள்ள கிராமப்பகுதியை சேர்ந்த சுமார் 1000 இணைப்புதாரர்களை முன்னறிவிப்பின்றி திடீரென அதிரையிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் புதிதாக துவங்கியிருக்கும் காஸ் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ள தகவல் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நடுத்தெரு, புதுமனைத்தெரு, சிஎம்பி லேன், பிலால் நகர், எம்எஸ்எம் நகர் ( ஆதம் நகர் ), மேலத்தெரு, கீழத்தெரு, புதுத்தெரு, ஆஸ்பத்திரி தெரு, சேது ரோடு, முத்தம்மாள் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இணைப்புதாரர்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அதிருப்தியுடன் கூறியதாவது...
கடந்த 26-06-2015 அன்று என்ற 0091 9443333960 எண்ணிலிருந்து திடீரென எஸ்எம்எஸ் ஒன்று வந்தது. அதில் 'உங்கள் கியாஸ் இணைப்பு 24 ந் தேதி ( 24-06-2015 ) முதல் கொள்ளுக்காடு மனம் போல் இன்டேன் கியாஸ் ஏஜென்சிக்கு மாற்றப்பட்டு உள்ளது. உங்கள் புதிய எண் :__XXXXXX__  தொடர்பு கொள்ள போன் எண்: 7867070250 / 786 7070251 / 04373 293800' என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை வாசித்த எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலு இன்டேன் காஸ் நிறுவனத்திலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவை கொண்டுள்ள கொளுக்காடு கிராமத்திற்கு மாற்றியுள்ளனர். இதுதொடர்பாக எந்தவொரு தகவலும் முன்கூட்டியே எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை. அவர்கள் இஷ்டத்திற்கு திடீரென மாற்றியுள்ளார்கள். அதிரையிலிருந்து கொள்ளுக்காடு ஏஜெண்டை அணுக குறைந்த பட்சம் 15 கிலோ மீட்டர் தொலைவில் சென்று வர வேண்டும். இது எங்களுக்கு சாத்தியப்படாத ஒன்று. இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் விரைவில் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...