Pages

Friday, July 10, 2015

கேஸ் ஏஜென்ஸியை அதிரைக்கே கொண்டு வர வேண்டும்!

அதிரை மற்றும் இதன் அருகில் உள்ள கிராமப்பகுதியை சேர்ந்த சுமார் 1000 இணைப்புதாரர்களை முன்னறிவிப்பின்றி திடீரென கொள்ளுக்காடு பகுதியில் உள்ள கேஸ் சிலிண்டர் நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள தகவல் அதிரை மக்களை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வழக்கமாக செயல்பட்டு வருகிற ஒரு ஏஜென்சியிலிருந்து திடீரென இவ்வாறு மாற்றம் செய்வது சாதரண காரியமன்று.

ஏற்கனவே இந்த கேஸ் சிலிண்டர்  விவகாரத்தில் பல இன்னல்களை சந்தித்து வரும் அதிரை மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு இது மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் செயலாகும்.

இதை சற்றும் உணராமல் இந்த திடீர் அறிவிப்பை செய்திருக்கிறார்கள். இதனை துரிதமாக செயல்பட்டு தடுத்து நிறுத்துவதோடு, மிக முக்கியமாக அதிகமான இணைப்பை கொண்டுள்ள அதிரை மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அதிரைக்கே இந்த ஏஜென்ஸி வாய்ப்பைக் கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஊரில் உள்ள அரசியல் கட்சிகள், குறிப்பாக(சமுதாய அமைப்புகளான தமுமுக, ததஜ, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள்) இதில் எந்த பாகுபாடும் பார்க்காமல் ஒன்றிணைந்து செயல்பட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிப்பதோடு, குறுகிய காலக்கெடு கேட்டு இந்த இடமாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

எனென்றால் உள்ளூரில் இருப்பவர்களை விட குடும்பத்தை ஊரில் விட்டு வெளிநாட்டில் வசிப்பவர்களுக்குத்தான் தெரியும, ஊரில் உள்ள நம் வீட்டுப் பெண்கள் (குறிப்பாக ஆண்கள் உதவி இல்லாமல் எல்லா விசயத்திற்கும் தானே அணுக வேண்டிய நிலை உள்ளதையும் அதனால் ஏற்படும் சிரமத்தையும் காணும் விதமும்)

எனவே பல காரியங்களில் தாமதமாக செயல்பட்டு அதிரைக்குக் கிடைக்க வேண்டிய பல சலுகைகளும், சவுகரியங்களும் நம் கையை விட்டு போய்விடுகிறதையும் சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன.

எல்லாவற்றிற்கும் தகுதியுடைய அதிரை பல விசயங்களில், குறிப்பாக அரசு சார்ந்த விசயங்களில் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், இதில் காலதாமதம் செய்யாமல் உள்ளூர் அமைப்புகள் விரைந்து முயற்சி மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தாமதித்தால் இழப்பு நமக்குத்தான். தும்பை விட்டு வாலை பிடிக்காமல் உடன் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் எனபது எனது கோரிக்கை.

-இப்னு ஹசன்


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...