Pages

Thursday, July 9, 2015

தஞ்சை விமானப் படைத்தளத்தில் ஆய்வு !

தஞ்சாவூர் விமானப்படைத்தளத்தை பார்வையிடுவதற்காக வந்த இந்திய விமானப்படையின் தென்பிராந்திய தளபதி ஏர்மார்ஷல் ஜஸ்பீர் வாலியாவுக்கு அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய விமானப்படையின் தென்பிராந்திய விமானப்படை தளபதியாக பொறுப்பில் உள்ள ஏர் மார்ஷல் ஜஸ்பீர் வாலியா, தான் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தை பார்வையிடுவதற்காக 2 நாள் பயணமாக, இந்தியா விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் மனைவி ஹர்பிந்தர் வாலியாவுடன் புதன்கிழமை தஞ்சாவூர் வந்தார்.

அவரை தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தின் தளபதி ஆர்.வி.சிண்டே பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். பின்னர் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஜஸ்பீர் வாலியா ஏற்றுக் கொண்டு, தஞ்சாவூர் விமானப் படைத்தளத்தில் உள்ள பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளையும், விமானப்படையின் இயக்கத் திறன்களையும் பார்வையிட்டார். அவருக்கு, தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தின் முக்கியத்துவம், இங்கு நடைபெறும் நாட்டின் பல்வேறு பாதுகாப்பு தொடர்பான முன்னேற்றங்கள் குறித்தும் சிண்டே விளக்கினார். அப்போது விமானப்படை வீரர்களிடம் பேசிய தளபதி ஏர் மார்ஷல் ஜஸ்பீர் வாலியா, தஞ்சாவூர் விமானப்படை நிலையம் செயல்பாடுகளுக்குத் தயார் நிலையும் சிறப்பாக இருப்பதாகக் கூறினார்.

தளபதி ஏர்மார்ஷல் ஜஸ்பீர் வாலியாவின் மனைவியும், விமானப்படை வீரர்கள் மனைவியர் நலச்சங்கத்தின் தென்பிராந்திய தலைவருமான ஹர்பிந்தர் வாலியா, தஞ்சாவூர் விமானப்படை வீரர்கள் மனைவியர் நலச்சங்கத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு, சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...