Pages

Friday, July 3, 2015

அமீரக தொழில் அதிபர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

இந்தியாவில் இருந்து வேலைக்கு ஆட்களை அழைக்க வெளிநாட்டு தொழிலதிபர்களுக்காக ஆன்லைன் பதிவு முறை துவக்கக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் உள்ள இந்திய தூதரக அதிகாரி நீத்தா பூஷன் கூறியதாவது:  
வெளிநாட்டு தொழிலதிபர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து நர்ஸ்கள் உள்பட அனைத்து பணிகளுக்கும் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய, தாய்நாட்டை விட்டு வெளியே சென்று குடியேறுவது குறித்த தகவல்களை இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதில் பணியின் தன்மை குறித்தும், பணிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்தும் குறிப்பிடவேண்டும். இதன் பிறகுதான் அந்த தொழிலதிபர் நேரடியாகவோ அல்லது முகவர்கள் மூலமோ ஆன் லைனில் தங்களுக்கு தேவையான பணியாட்களை தேர்வு செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து தூதரக அதிகாரிகள் மேலும் கூறும்போது,
‘150க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை இந்தியாவில் இருந்து தேர்வு செய்யவேண்டும் என்று முடிவு செய்யும் வெளிநாட்டு தொழிலதிபர்கள், எத்தனை பேர் தேவை என்பது பற்றியும் வேலை பற்றிய விவரங்களையும் இந்திய தூதரகத்தில் பதிவு செய்து விட்டு, பின்னர் அதற்கான அனுமதி பெற்று ஆன் லைன் மூலம் நேரடியாகவோ அல்லது முகவர்கள் மூலமோ ஆட்களை தேர்வு செய்யலாம். 20 முதல் 50 பேர் வரையிலான ஆட்களை தேர்வு செய்ய விரும்பும் வௌிநாட்டு தொழிலதிபர்கள், இம்மாத இறுதிக்குள் தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்யவேண்டும்.’ இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி:தினகரன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...