Pages

Thursday, July 2, 2015

ஆம்பூர் கலவரம் தொடர்பான ஷமீல்அஹ்மது வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

ஆம்பூர் ஷமீல் அஹ்மது வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் முதல்கட்ட விசாரணையை நேற்று தொடங்கினர்.

பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த பழனி மனைவி பவித்ரா காணாமல் போன வழக்கில் ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அஹ்மதுவை பள்ளிகொண்டா போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். போலீஸார் தாக்கியதாகக் கூறி ஷமீல் அஹ்மது, சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு அங்கு ஜூன் 26-ம் தேதி உயிரிழந்தார். போலீஸார் தாக்கிய தால் ஷமீல் அஹ்மது உயிரிழந்த தாகக் கூறி ஆம்பூரில் கடந்த 27-ம் தேதி கலவரம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், ஷமீல் அஹ்மது வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. எஸ்பி நாகஜோதி தலைமையில் டிஎஸ்பி அனந்தகுமார், ஆய்வாளர்கள் விஜய், அன்புக்கரசி, கருணாநிதி ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.

சிபிசிஐடி நாகஜோதி நேற்று வேலூர் வந்தார். அவரிடம் ஷமீல் அஹ்மது வழக்கு ஆவணங்களை போலீஸார் ஒப்படைத்தனர். அதனை பெற்றுக்கொண்ட சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து முதல்கட்ட விசாரணையை நேற்று தொடங்கினர்.

ஷமீல் அஹ்மது விசாரணைக் காக அழைத்துச் செல்லப்பட்ட பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் எஸ்பி நாகஜோதி நேற்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து சிபிசிஐடி போலீஸ் தரப்பில் கேட்டபோது, ஷமீல் அஹ்மது வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி கொண்டா காவல் நிலையம், ஷமீல்அஹ்மது அடைத்து வைக்கப்பட்ட இடம், காணாமல் போன பவித்ராவின் இப்போதைய நிலைமை, அவரது குடும்ப பின்னணி, செல்போன் விவரங்கள் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக உண்மை நிலவரம் தெரியவரும்’’ என்றனர்.

நன்றி: தமிழ் ஹிந்து,
July 2, 2015

1 comment:

  1. போலீஸ் கலவரத்தை அடக்காமல் அதனை கேமராவில் படமெடுத்து நேற்று 95 பேரை கைது செய்து இருக்கிறார்கள் , 54 போலீஸ் அடிவாங்கிய சம்பவம் தமிழகத்தில் ஆம்பூரில் நடந்துள்ளதால் எப்படி நேர்மையான விசாரணை இருக்கும் என்று சொல்ல இயலாது , பொதுப் பிரச்சனையை மதக்கலவரமாக மாற்ற துடிக்கும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் அப்போது தான் ஆம்பூர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும்.

    RK தேர்தல் காரணமாக துப்பாக்கி சூடு நடக்க வில்லை இல்லையன்றால் சூட்டு தள்ளிருப்பானுங்க பிழைத்தது ஆம்பூர் மக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...