Pages

Tuesday, July 7, 2015

மதினாவில் புதிய விமான நிலையம் திறப்பு !

உலகம் முழுவதும் இருந்து வரும் கோடிக்கணக்கான ஹஜ் யாத்ரீகர்கள் வசதிக்காக சவுதி அரேபியா நாட்டில் உள்ள மதினா நகரில் புதிய விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி புனிதக்கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற ஆண்டுதோறும் உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பயணிகள் முஹம்மது நபியின் பிறந்த ஊரான மக்கா, மற்றும் அவரது நினைவிடம் அமைந்துள்ள மதினா நகரங்களுக்கு புனித யாத்திரை செல்கின்றனர்.

இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரை அடுத்த மாதம் துவங்கவுள்ளது. இதுவரை மதினா நகரில் விமான நிலையம் இல்லாத குறையை போக்க புதிய விமான நிலையத்தை கட்டவும், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தும் சவுதி அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதையடுத்து, விறுவிறுவென கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த மதினா சர்வதேச விமான நிலையத்தை சவுதி மன்னர் சல்மான் திறந்து வைத்தார்.

சுமார் 120 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்துக்கு இளவரசர் முஹம்மது பின் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

40 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 6 முனையங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் 36 லிப்ட்கள், 28 நகரும் படிக்கட்டுகள் உள்ளன. ஆண்டுதோறும் சுமார் 80 லட்சம் பயணிகள் பயனடையும் வகையில் தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த விமான நிலைய வளாகத்தில் மேலும் இரண்டு இணைப்பு பகுதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் ஆண்டுதோறும் சுமார் 4 கோடி பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. சவுதி அரேபியாவில் ஏற்கனவே 27 விமான நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...