Pages

Wednesday, July 15, 2015

சேர்மனுக்கு சம்சுல் இஸ்லாம் சங்கம் அமீரக கிளை நன்றி தெரிவிப்பு !

அமீரகத்தில் செயல்படும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் கிளையின் சார்பில் ஊர் நலன் கருதி அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்கள் எடுக்கும் அனைத்து செயல்களுக்கும் முழு ஆதரவு வழங்க இருப்பதாகவும், மேலும் அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவை செயல்படுத்த தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சங்கத்தின் சார்பில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் அவர்களுக்கு எழுதப்பட்ட நன்றி தெரிவிப்பு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது:

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    சங்கை மிகு சஹர் ரமலான்.

    ஒரு துறையில் பொறுப்பில் இருக்கும் அதிகாரி மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல நலத்திட்டங்களை நிறைவேற்றிட முயற்சி செய்கின்றார், இது உண்மை, ஆனாலும் எல்லா முயற்சிகளும் நூறு சதவிகிதம் கை கூடும் என்பது சாத்தியப்படலாம், சாத்தியப்படாமலும் இருக்கலாம்.

    இப்படியான வகையில் பார்க்கும்போது, நமது சேர்மேன் தம்பி அஸ்லம் அவர்களின் முயற்சியில் 40ஆண்டுகளுக்கும் மேலாக தூர் வாராமல் கிடந்த CMPவாய்கால் தூர் வாரப்பட்டது, அதிரை குளங்கள் நிரம்பி வழிந்தன, 24மணிநேர மருத்துவ சேவை உதயமானது. பிளாஸ்டிக் பை, இன்னும் பல சாத்தியப்பட்டது, சில சாத்தியபடாமல் இருக்கலாம்.

    மக்கள் ஒத்துழைப்பு, அரசு ஒத்துழைப்பு, சக அலுவலர்கள் ஒத்துழைப்பு, உடல் ஒத்துழைப்பு, இன்னும் எல்லா சூழலிலும் ஒத்துழைப்பு இருந்தால்தான் முயற்சியும் வெற்றி அடையும் என்பது உண்மை.

    நாம், நம் தோட்டத்தில் எத்தனையோ மரக்கன்றுகளை நடுகின்றோம், எல்லா மரக்கன்றுகளும் உயிர்பெற்று விடுகின்றனவா? எல்லா மரக்கன்றுகளும் உயிர் பெறனும் என்று நாம் முயற்சி செய்கின்றோம் அவ்வளவுதான்.

    அதுபோல், எல்லா அதிகாரிகளும் நூறு சதவிகிதம் சாதிக்க முடியாது, அதே நேரத்தில் சாதித்ததை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

    இந்த நேரத்தில் சேர்மேன் தம்பி அஸ்லம் அவர்களை பாராட்டி நன்றி சொல்வதே சாலச் சிறந்தது.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...