Pages

Sunday, July 5, 2015

முத்துப்பேட்டையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி !

முத்துப்பேட்டை வர்த்தகக்கழகம், ரோட்டரி சங்கம் மற்றும் ஆல்வின் மோட்டார் நிறுவனம் இணைந்து ஹெல்மெட் விழிப்புணர்வு பைக் பேரணி நேற்று நடைபெற்றது. முன்னதாக துவக்க விழா நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் ஆர்.வி.காமராஜ் தலைமை வகித்தார். வர்த்தகக்கழக தலைவர் இரா.ராஜராம் முன்னிலை வகித்தார். ஹெல்மெட் விழிப்புணர்வு பைக் பேரணியை முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் துவக்கி வைத்தார். பேரணி திருத்துறைப்பூண்டி சாலை, ஆசாத் நகா,; பழைய பேருந்து நிலையம், மன்னார்குடி சாலை, கிழக்கு கடற்கரை சாலை, செம்படவன் காடு, பட்டுக்கோட்டை சாலை, பங்களா வாசல், பெரிய கடைத்தெரு வழியாக புதிய பேருந்து நிலையத்தை சென்றடைந்தது. நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, மெட்ரோ மாலிக், முன்னால் தலைவர்கள் பாலகிருஷ்ணன், ராமமூர்த்தி, சுந்தரராஜன், முன்னால் செயலாளர்கள் ராமலிங்கம் ராஜ்மோகன், ரெங்கசாமி, ரோட்டரி நிர்வாகிகள் மணிகண்டன், நந்தாஜீவானந்தம் மற்றும் வர்த்தகக்கழக நிர்வாகிகள், வியாபாரிகள் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். முடிவில் ஆல்வின் மோட்டார்ஸ் நிறுவனர் தாஸ் நன்றி கூறினார்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

1 comment:

  1. நல்ல விழிப்புணர்வு பேரணி தான் அதே நேரத்தில் தரமான ஹெல்மெட் விலை ராக்கெட் வேகத்தில் விலையேறி உள்ளது இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கணும், தரமில்லாத ஹெல்மெட் அடையாளம் கண்டுபிடித்து அந்தக் கம்பனியின் விற்பனை முடக்க வேண்டும் அல்லது தலைகவசம் அணிந்தவர் உயிர் இழந்தால் அதற்க்கான இழப்பிடு குறுப்பிட்ட கம்பெனி வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு இட வேண்டும் அதை விட்டுவிட்டு அம்மா ஹெல்மெட் ஐயா ஹெல்மெட் தயாரித்து மக்களை துன்புறுத்த வேண்டாம். முத்துப் பேட்டை செய்தி தேவை தான் நம் மக்களுக்கு.- நன்றி!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...