Pages

Friday, July 10, 2015

கேஸ் இணைப்பை அதிரைக்கு திரும்ப கொண்டுவர வலியுறுத்தி: சம்சுல் இஸ்லாம் சங்கத்திடம் முறையீடு !

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பட்டுக்கோட்டை சாலையில் செயல்படும் பாலு இன்டேன் காஸ் நிறுவனம் மூலம் காஸ் இணைப்பை பெற்று வீட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் காஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்து பெற்று வருவார்கள். இந்த நிறுவனம் மூலம் அதிரை மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய கிராமப் பகுதிகள், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு கேஸ் சிலிண்டர்களை விநியோகித்து வருகிறது.

இந்நிலையில் அதிரை மற்றும் இதன் அருகில் உள்ள கிராமப்பகுதியை சேர்ந்த சுமார் 1000 இணைப்புதாரர்களை முன்னறிவிப்பின்றி திடீரென அதிரையிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் புதிதாக துவங்கியிருக்கும் மனம் போல் காஸ் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ள தகவல் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நடுத்தெரு, புதுமனைத்தெரு, சிஎம்பி லேன், பிலால் நகர், எம்எஸ்எம் நகர் ( ஆதம் நகர் ), மேலத்தெரு, கீழத்தெரு, புதுத்தெரு, ஆஸ்பத்திரி தெரு, சேது ரோடு, முத்தம்மாள் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இணைப்புதாரர்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து சம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லா பகுதியினர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகார் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டு அதன் படி, அதிரை நியூஸ் நிர்வாகி மரைக்கா இத்ரீஸ் தலைமையில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் சங்கத்தலைவரை இன்று நேரடியாக சந்தித்து மனு அளித்தனர். இதில் சம்பந்தபட்ட அலுவலர்களின் கவனத்திற்கு உடனடியாக எடுத்து சென்று முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டுள்ள கேஸ் இணைப்புகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்த கேட்டுக்கொண்டனர்.

2 comments:

  1. கேஸ் சிலிண்டர் விவகாரத்தில் ஏனோ தானோ என இல்லாமல் துரிதமாக செயல்பட வேண்டியது நமது கடமை.

    சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட மக்கள் இதனை முன்னெடுத்து கோரிக்கை வைத்ததுபோல பிற முஹல்லா வாசிகளும் அவரவர் சங்கங்களுக்கு கோரிக்கை வைக்க முன்வர வேண்டும்.

    தாமதித்தால் 1000 இணைப்புகளுக்கு உள்ள நிலை 10,000 இணைப்புகளுக்கு வரலாம்.

    ReplyDelete
  2. கேஸ் சிலிண்டர் விவகாரத்தில் ஏனோ தானோ என இல்லாமல் துரிதமாக செயல்பட வேண்டியது நமது கடமை.
    தாமதித்தால் 1000 இணைப்புகளுக்கு உள்ள நிலை 10,000 இணைப்புகளுக்கு வரலாம். அதிரயில் உள்ள அனைத்து இயக்கங்களும் இப்பிரச்சினைக்காக ஒன்று சேர்ந்து போரட முன்வரவேன்டும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...