Pages

Monday, July 13, 2015

செக்கடி குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கண்டித்து சாலைமறியல்: எஸ்டிபிஐ கட்சியினர் கைது !

முத்துப்பேட்டையை  சேர்ந்த சமூக ஆர்வலர் முகமது மாலிக், சென்னை உயர் நீதி மன்ற வழி காட்டுதலின்படி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள செக்கடிக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று டிஆர்ஓ, ஆர் டிஓ, தாசில்தார் ஆகியோருக்கு  மனு  அனுப்பினார். இதையடுத்து செக்கடி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அளந்து கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து குளத்தை ஆக்கிரமித்துள்ள 40 ஆக்கிரமிப்பாளர்கள் பேரூராட்சி கவுன்சிலர்  தலைமையில் கையெழுத்திட்டு தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினர். அதில், அன்றாடம் பிழைப்பு நடத்தி குடும்பத்தை காப்பாற்றி வருகிறோம். இந்த பகுதியில் பல ஆண்டுகளாக குடிசை வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். வீடுகளுக்கு சொத்து வரி, மின் கட்டணம் செலுத்தி வருகிறோம். எங்களது குடியிருப்புகளை காலி செய்வதற்காக  வருவாய்  துறையினர் இடத்தை  அளந்துள்ளனர். நாங்கள்  இப்பகுதியில் குடியிருப்பதால் போக்குவரத்துக்கோ, பொது பணித்துறைக்கோ  எந்த இடையூறும் இல்லை. அதனால் எங்கள் குடியிருப்புகளுக்கு எந்த  இடையூறும் ஏற்படாத வகையில்  நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி மீறி எங்கள் குடியிருப்புகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டால் திருவாரூர் கலெக்டர் அலுவலகம்  முன்பு நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து  கொள்வதை தவிர  வேறு வழி இல்லை என்று  குறிப்பிட்டு இருந்தனர்.

இன்னும் 10 நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற இருப்பதாக பேரூராட்சி நிர்வாகம் கெடுவிடுத்து இருந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவ மாணவிகள் பள்ளிக்கூடம் செல்லாமல் புறக்கணித்து மாற்று இடம் கோரி சாலை மறியல் நடத்தினர். செக்கடி குளம் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கண்டித்து இன்று காலை 11 மணி அளவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நகர தலைவர் மாலிக், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் தமீம் அன்சாரி, எஸ்டிபிஐ கட்சியின் நகர துணை தலைவர் காதர் முகைதீன் மற்றும் ஆர்பாட்டக்காரர்கள் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் இந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

செய்தி மற்றும் படங்கள்:
சுனா ஈனா ( சுல்தான் இப்ராஹீம்) 
முத்துப்பேட்டை
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...