Pages

Sunday, July 5, 2015

ஆம்பூர் கலவரம்: உண்மை அறியும் குழு நேரில் கள ஆய்வு !

மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பின் (NCHRO ) தலைவர் பேரா. அ.மார்க்ஸ் தலைமையில் ஃபைஸ் பைசல், பத்திரிக்கையாளர் முஹம்மது ஷிப்லி ஆகியோர் அடங்கிய உண்மை அறியும் குழு, ஆம்பூர் கலவரம் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் முஸ்லிம் இளைஞர்களின் தொடர் கைது குறித்து ஆய்வு மேற்கொண்டது.

பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் மார்டின் பிரேம்ராஜ் துன்புறுத்தி கொலை செய்த இளைஞர் சமீல் அகமதுவின் மாமனாரை சந்தித்து நடந்த சம்பவங்களை கேட்டறிந்தது.

இதைதொடர்ந்து ஆம்பூரில் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களின் குடும்பத்தினரை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தது. ஆம்பூர் ஹௌசிங் போர்டு பகுதியில் முழுக்க முழுக்க முஸ்லிம்களே வசிக்கிறார்கள். இப்பகுதியிலிருந்து தான் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

காவல்துறை அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்து கதவுகளை உடைத்து வன்முறையாக கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது, கைது செய்யப்பட்டவர்களில் பள்ளி கல்லூரி மாணவர்களும் அடங்குவார்கள். இவர்களில் பலரை காவல்துறை விடுவித்தும் உள்ளது.

கள ஆய்வை முடித்துக்கொண்டு, ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தில்
முகாமிட்டிருந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமாரியை இக்குழு சந்தித்தது. காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேரா.மார்க்ஸ்சிடம் விளக்கினார். மாவட்ட கண்காணிப்பாளர் செந்தி குமாரி. செந்தில் குமரியுடன் பேசிக்கொண்டிருந்த நிலையில், நமது கள ஆய்விற்கு உதவிகரமாக நம்மோடு பயணித்த நமக்காக வெளியில் காத்துக்கொண்டிருந்த உள்ளூர் இளைஞர்கள் நால்வரை பார்த்த ஆம்பூர் டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன், தாலுகா இன்ஸ்பெக்டர் பாபு ( இவர் ஆக்டிவ் டூட்டி யாக பள்ளிகொண்டா காவல் நிலையத்தையும் கவனிக்கிறார் ) ஆகியோர் அவர்களிடம் இருந்த செல்போனை பிடுங்கிகொண்டு காவல்நிலையத்திற்குள் அவர்களை அழைத்து வந்து கைது செய்யும் நடவடிக்களை துவக்கினர். இது அங்கிருந்த டி.எஸ்.பி கணேசனுக்கு தெரிந்தே நடந்திருக்கிறது. பின்னர், இது குறித்து பேரா.மார்க்ஸ் எஸ்.பி செந்தில் குமாரியிடம் பேச...அவர் 'என்ன கணேசன் இது...ஏன் இப்படி செய்யுறீங்க ? இவர்களோடு வந்தவர்களை ஏன் கைது செய்கிறீர்கள் '' என்றதோடு, அனைவரையும் விடுவிக்கச் சொன்னார். நம் கண்முன்னே நடந்த இந்த சம்பவமே ஆம்பூர் காவல்துறை சகட்டு மேனிக்கு கண்ணில் படும் அப்பாவிகளை கைது செய்கிறது என்பதற்கு சான்றாகும்.

முதல் கட்ட ஆய்வை நடத்திய பின் ,அன்று மாலை வேலூர் ரிவர் வியு ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது இக்குழு.
செய்தியாளர்களிடம் பேசிய NCHRO தலைவர் பேரா.அ.மார்க்ஸ், ஆம்பூர் வன்முறையை கடுமையாக கண்டித்ததோடு போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அப்பாவிகள்; இது போன்ற கைதுகள் தவிர்க்கப்படவேண்டும். இவை வேறு விதமான சிக்கல்களை உருவாக்கும் அரசாங்கம் இது போன்ற கைதுகள் நடைபெறுவதை தடுக்க வேண்டும்' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பேரா.மார்க்ஸ், இது முதற்கட்ட ஆய்வு தான், முழுமையான ஆய்வை விரைவில் மேற்கொள்வோம். நடைபெற்றுள்ள சம்பவத்தை பொறுத்தவரை அப்பாவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது உணர முடிகிறது. அதை வெளிப்படுத்துவது தான் இந்த செய்தியாளர் சந்திப்பின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பள்ளிகொண்டாவில் ஷமில் அஹமதுவை அடைத்து வைத்து இன்ஸ்பெக்டர் மார்டின் சித்திரவதை செய்த கெஸ்ட் அவுஸ்சை பார்வையிட்டோம். இந்த கெஸ்ட் அவுசிற்கு அருகாமையில் வசிக்கும் உள்ளூர் கவுன்சிலர் உள்ளிட்ட மக்கள், இரவு நேரங்களில் இந்த கெஸ்ட் அவுசிலிருந்து கதறும் சப்தம்கேட்டது என்றனர்.

நன்றி: ஃபைஸ் பைசல்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...