Pages

Wednesday, July 1, 2015

அதிரையில் வெஸ்டர்ன் யூனியன் நடத்திய பரிசளிப்பு நிகழ்ச்சி !

பால் மெர்ச்ண்டஸ் லிமிடெட் நிறுவனத்தின் அங்கமாகிய வெஸ்டர்ன் யூனியன் மூலம் பண பரிவர்த்தனை செய்து கொள்ளும் வாடிக்கையாளர்களை தேர்வு செய்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் தலைமை வகித்தார். பால் மெர்ச்ண்டஸ் லிமிடெட் நிறுவனத்தின் தெற்கு - வடக்கு பொறுப்பாளர் சுதாகர் ராவ், தமிழ்நாடு வெஸ்டர்ன் யூனியன் தலைமை அலுவலர் பிரேம் சுகுனேஷ், மண்டல மேலாளர் கே கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தனர்களாக பங்கேற்ற அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் மற்றும் அதிரை கனரா வங்கி மேலாளர் ஆர். மதியழகன் ஆகியோர் தேர்வான அதிரை பகுதி வாடிகையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சி குறித்து பால் மெர்ச்ண்டஸ் லிமிடெட் நிறுவன மண்டல மேலாளர் கே. கோவிந்தராஜன் நம்மிடம் கூறுகையில்...
'பால் மெர்ச்ண்டஸ் லிமிடெட் நிறுவனத்தின் அங்கமாகிய வெஸ்டர்ன் யூனியன் மூலம் பண பரிவர்த்தனை செய்து கொள்ளும் வாடிக்கையாளர்களில் மொத்தம் 3 லட்சம் பேர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்சிகளை நடத்தி வருகிறோம். ஆண்டு தோறும் பண்டிகை காலங்களில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியினர் மொத்தம் 16 பேர்கள் தேர்வானார்கள். அனைவருக்கும் இன்று பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மகிழங்கோட்டை கிராமத்தை சேர்ந்த பிரபாவதி என்ற வாடிக்கையாளருக்கு ஃப்ரிஜர் பரிசு வழங்கப்பட்டது. மேலும் ரமலான் பண்டிகையொட்டி சிறப்பு சலுகையாக ஜூன் 15 முதல் ஜூலை 30 வரை தேர்வாகும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன' என்றார்.
 
  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...