Pages

Thursday, July 16, 2015

அதிரையில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி !

அதிரையில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று மாலை அதிரை பேருந்து நிலையம் அருகே உள்ள சாரா திருமண மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z. முஹம்மது இல்யாஸ் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர தலைவர் அன்வர், மாவட்ட செயலாளர் அபுல் ஹசன், மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது,  எஸ்டிபிஐ கட்சியின் முன்னாள் அதிரை நகர தலைவர் ஏ.எம்.கே முஹம்மது ஹனீப், புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற துணை தலைவர் அபுல் கலாம் ஆஷாத் மற்றும் ஏனைய பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சி முடிவில் எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர் அன்வர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...