Pages

Thursday, July 2, 2015

சமூக நல்லிணக்க பிரச்சார பயணம்: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் !

தஞ்சாவூர் ஒன்றியம் சூரக்கோட்டை கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளிக் கல்வி துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் காவல் துறை சார்பில் சாதி மத வேறுபாடுகளற்ற சமுதாயம் படைப்போம் என்கின்ற தலைப்பில் விழிப்புணர்வு நாடகம் மற்றும், விழிப்புணர்வு பிரச்சார பயணத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு நாடகம் மற்றும் பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்திரவிற்கிணங்க தமிழகம் முழுவதும் சாதி மத வேறுபாடுகளற்ற சமுதாயத்தை உருவாக்கிட விழிப்புணர்வு பேரணிகள், வீதி நாடகங்கள் நடத்த உத்தரவிட்டுள்ளார்கள். தஞ்சாவூர் ஒன்றியம், சூரக்கோட்டையில் இன்று விழிப்புணர்வு நாடகம் மற்றும் பேரணி தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 3.7.2015 அன்று பூதலூர் ஒன்றியம் தொண்டராயம்பாடி, விஷ்ணம்பேட்டை, கும்பகோணம் ஒன்றியம் ஆரியபடையார், பட்டுக்கோட்டை ஒன்றியம் ஏரிப்புறக்கரை, சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளுர், பட்டுக்கோட்டை நகரம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு பேரணி மற்றும் நாடகம் நடைபெறும்.  மேலும் 4.7.2015 அன்று திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஒன்றியம், மகாராஜபுரம் ஆகிய இடங்களிலும் விழிப்புணர்வு நாடகம் நடைபெறும்.

தஞ்சாவூர் மாவட்டம் சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு உயர்ந்த மாவட்டம் என்கின்ற பெயரை பெறுகின்ற வகையில் மாவட்ட மக்கள் அனைவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். மாநிலத்திலேயே சாதி மத வேறுபாடுகளற்ற மாவட்டம் என்கின்ற பெயரினை பெறுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

தொடக்க நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ரெ. திருவளர்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் திரு.ரெங்கநாதன், அனைவருக்கும் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.கோபாலகிருஷ்ணன், சூரக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் திரு.அண்ணாதுரை, பள்ளி தலைமையாசிரியை திருமதி.அன்புச்செல்வி, தகவல் சாதன அலுவலர் திரு.மார்டின், காவல் துறையினர் மற்றும் ஏராளமான மாணவ மாணவியர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...