Pages

Wednesday, July 8, 2015

அதிரையில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டண விவரங்கள் !

மிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கடந்த [ 2013-2014 ] கல்வியாண்டு முதல் நடப்பு [ 2015-2016 ] கல்வியாண்டு வரை புதிய கட்டணங்களை நிர்ணயித்து, அரசு இணையதளத்தில் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

L.K.G முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்து வகுப்பிற்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் வசதி, செலவினம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை போன்ற காரணிகளை ஆராய்ந்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டண விவரங்கள் கீழ் கண்டவாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

PRIVATE   SCHOOLS   FEE   DETERMINATION   COMMITTEE   CHENNAI-600   006   
FEES   FIXED   FOR   THE   YEAR   2015-2016   -   DISTRICT:   THANJAVUR

Oxford  Nursery  & Primary  School
LKG : 6050 
UKG : 6050  
I : 6716
II : 6716
III : 6716
IV : 6716
V : 6716

E.P  MODEL  N  &  P  SCHOOL
LKG : 4659 
UKG : 4659 
I : 6050
II : 6050
III : 6050
IV : 6050
V : 6050

Western  Nursery  & Primary  School
LKG : 4235 
UKG : 4235 
I : 4917
II : 4917
III : 4917
IV : 4917
V : 4917

Tharbiyathul  Islamia Nursery  &  Primary School
LKG : 5082 
UKG : 5082 
I : 6716
II : 6716
III : 6716
IV : 6716
V : 6716

Laural  Higher  Secondary School
LKG : NIL  
UKG :  NIL
I : 8470
II : 8470
III : 8470
IV : 8470
V : 8470
VI : 9801
VII : 9801
VIII : 9801
IX : 11132
X : 11132
XI : 12463
XII : 12463

Khadir  Mohideen  Girls Higher  Secondary  School
VI : 2299
VII : 2299
VIII : 2299
IX : 2965
X : 2965
XI : 3449
XII : 3449

குறிப்பு :
1. அதிரையில் இயங்கும் மற்ற தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள் அரசின் அட்டவணையில் இடம்பெறவில்லை. விடுபட்ட பள்ளிகளின் கட்டண விவரங்கள் சேகரித்து தளத்தில் வெளியிடப்படும்.

2. மேலதிக தகவல் மற்றும் மற்ற ஊர்களில் கல்வி பயில்வோர் http://sp.tn.gov.in/miscellaneous/pdf/23.pdf என்ற அரசின்  இணையதளம் மூலம் கட்டண விவரங்களை தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

3. தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளதை வீட கூடுதலாக  வசூலிக்க நேரிட்டால் இவற்றை அரசின் கவனத்திற்கு ஆதாரத்தோடு எடுத்துச்செல்ல பெற்றோருக்கும், சமூக ஆர்வலருக்கும் முழு உரிமை உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசு நிர்ணயித்ததைவீட கூடுதல் வசூலிக்கப்பட்டது நிரூபணமானால் பள்ளிகளின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்துவிடும் அதிகாரமும் அரசிற்கு உள்ளது என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்.
Image Credit : The Hindu

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Nowadays education and medication becoming one of the top commercial.

    ReplyDelete
  3. பெற்றோர், தங்கள் வருமானத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை, தங்கள் குழந்தைகளின் பள்ளி கல்விக் கட்டணத்திற்காக செலவிட வேண்டியுள்ளது. அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட, அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக தெருகிரது. மேலே குறுப்பிடப்பட்ட கட்டணத்தை எந்தப் பள்ளியில் வசூலிக்கப் படுகிறது? லாரல் பள்ளியில் 5 , 3 வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவர்களின் 3 மாதக் கட்டணம் எவ்வளவு தெரியுமா? 55 ஆயிரம் ( டியூஷன் பீ + Transport ) ஆனால் நீதிபதி சிங்காரவேலு பரிந்துரையின்படி ஆண்டுக் கட்டணம் RS 8,470 (V ), RS 8,470 ( III ), எவ்வளவு வித்தியாசம் என்று பாருங்கள், போதாக் குறைக்கு யோகா வகுப்புன்னு சொல்லி பண வேட்டை ஆடுகிறது இதெல்லாம் நம் மக்களுக்கு தெரியும் யாரு ? எப்படி நடவடிக்கை எடுப்பது? எடுப்பவர்களுக்கு சம்பந்தப் பட்டவர்கள் துணை நிற்ப்பார்களா?

    தமிழகத்தில் சில பள்ளிகள் சிங்காரவேலன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு சில வசதிகள் மறுக்கப் படுகிறது , குறைந்த நேர வகுப்பு, உணவகம், கழிப்பறை பயன்படுத்த கட்டுப்பாடு, விளையாட்டு, நடனம் உள்ளிட்ட தனித்திறமை ஆர்வம் இருந்தாலும் எதிலும் கலந்துக் கொள்ள முடியாது. பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்கள் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கிறார்களா என்பதை பார்வை இட வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் கல்வி வியாபாரமவதை தடுக்கலாம்.

    ReplyDelete
  4. யார்இடம்புகார்அளிப்பதுவிபரம்தரவும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...