Pages

Wednesday, July 8, 2015

அதிரையின் எந்தந்த பள்ளிவாசல்களில் இடம்பெற்றுள்ள ஹவ்தின் ( அகல் ) புகைப்படங்கள் இவை ?

அதிரையில் பல்வேறு பொக்கிஷங்கள் காணப்பட்டு வந்தாலும் அதில் கம்பீரமாக காட்சியளிக்கும் பள்ளிவாசல்களே முதன்மையானதாக இருந்து வருகிறது. அதிரை பகுதிகளில் மொத்தம் 31 பள்ளிவாசல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் ஹவ்த் ( அகல் ) அமைக்கப்பட்டிருக்கும். இதில் சுத்தமான் நீர் நிரப்பட்டு, அதில் உயிருள்ள மீன்கள், பாசிகள் இடப்பட்டு கண்ணை கவரும் விதத்தில் பளபளப்பாகவும், குளுமையானதாகவும் காட்சியளிக்கும்.

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றாகிய தொழுகையை தினமும் நிலைநிறுத்திக் கொள்ளவதற்கு முன்பு தம்மை தூய்மைப்படுத்தி கொள்வதில் ஒவ்வொரு தொழுகையாளியும் ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக அகலில் நிரப்பட்ட தண்ணீரில் கை, கால்கள் முகம், வாய், தலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை சுத்தப்படுத்திக்கொள்வார்கள். இதனால் பள்ளிவாசல்களில் இடம்பெறும் ஹவ்து மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.

சரி விசயத்திற்கு வருவோம்...
இங்கே இணைக்கப்பட்டுள்ள ஹவ்தின் ( அகல் ) படங்கள் அதிரையில் உள்ள பள்ளிவாசல்களில் எடுக்கப்பட்டது. இவை எந்தந்த பள்ளிவாசல்களில் இடம்பெற்றுள்ள ஹவ்தின் ( அகல் ) புகைப்படங்கள் ?

சரியான விடைகளை கருத்துரை ( கமெண்ட்ஸ் ) பகுதியில் பதியவும்..
படம் 1
படம் 2

படம் 3
 
படம் 4
படம் 5

7 comments:

  1. 1.மக்தும் பள்ளி
    2.உமர் (ரலி) பள்ளி
    3.பிலால்(ரலி) பள்ளி
    4.ரஹ்மானியா பள்ளி
    5.

    ReplyDelete
  2. 1 மக்தும் பள்ளி
    2.புது பள்ளி
    3.பிலால்(ரலி) பள்ளி
    4.ரஹ்மானியா பள்ளி
    5.உமர் (ரலி) பள்ளி

    ReplyDelete
  3. Makthoom. Javiya. Bilal. Rahmaniya. Umar. Am I correct?

    ReplyDelete
  4. Makthoom. Javiya. Bilal. Rahmaniya. Umar. Am I correct?

    ReplyDelete
  5. 1. மஃதூம் பள்ளி
    2. மர்யம் பள்ளி
    3. இஜாபா பள்ளி
    4. ரஹ்மானியா பள்ளி
    5. வ.பேட்டை பள்ளி

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...