கூட்டத்தில் தி.மு.க 7-வது வார்டு கவுன்சிலர் ஜெகபருல்லா பேசுகையில்:
9-வது வார்டு பகுதியில் சட்டவிரோதமாகவும் பேரூராட்சி அனுமதி இல்லாமலும் 70-க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து துண்டிக்க வேண்டும். அதே போல் முத்துப்பேட்டை அனைத்து பகுதிகளிலும் இது போன்ற குடிநீர் இணைப்பைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நான் நீதிமன்றத்துக்கு செல்வேன் என்று ஆவேஷமாக பேசினார்.
அப்பொழுது சுயேச்சை 9-வது வார்டு கவுன்சிலர் பாவா பகுருதீன் எழுந்து எனது வார்டு பகுதியை பற்றி பேச யாருக்கும் அனுமதி இல்லை என்று வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டார். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு பரபரப்பானது. பின்னர் அ.தி.மு.க 13-வது வார்டு கவுன்சிலர் நாசர் பேசுகையில்: தெற்கு தெரு அரபு சாஹிப் பள்ளிவாசல் கந்தூரி விழா துவங்க இருக்கிறது. அதற்குள் சேதமாகி உள்ள பேட்டை சிமிண்ட் சாலையை சீரமைத்து தரவேண்டும் என்றார்.
முஸ்லிம் லீக் 15-வது வார்டு கவுன்சிலர் தம்பி மரைக்காயர் பேசுகையில்:
எனது பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் 16-வது வார்டு கவுன்சிலர் மெட்ரோ மாலிக் பேசுகையில்: பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஆகியவைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினார்கள். இதில் பா.ஜ.க கவுன்சிலர் மாரிமுத்து, தி.மு.க கவுன்சிலர்கள் அய்யப்பன், ஜெய்பு நிஷா, கிருஷ்ணன், ரெத்தினகுமார் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.
செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
முக்கியமில்லாத முத்துப்பேட்டைச் செய்தி ஏன் இங்கே...?
ReplyDelete