Pages

Saturday, July 11, 2015

விளக்குமாறை தூக்கிய அதிரை கவுன்சிலர் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய ஜும்மா பள்ளி அருகே கீழத்தெரு - மேலத்தெரு பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையில் மணல் குவியல் காணப்படுவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக சாலையோர மணல் காரணமாக வேகமாக இருசக்கர வாகனங்களில் வருவோர் வளைவில் சறுக்கி விழுந்து விபத்து ஏற்படுவதாகவும் கூறப்பட்டது.

அதிரை பேரூராட்சியின் 15 வது வார்டு கவுன்சிலர் அப்துல் லத்திப். தனக்கு கிடைக்கும் நேரங்களை பயனுள்ள வகையில் பொதுநல சேவைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரது வார்டு பகுதிகளில் ஆங்காங்கே மண்டிக்கிடக்கும் முட்புதர்களை அப்புறப்படுத்தினார். இதையடுத்து பசுமையை வலியுறுத்தி தனது சொந்த செலவில் மரங்கள் நடும் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில் சாலையோரங்களில் தேங்கி காணப்படும் மணல்களை அதிரை பேரூராட்சி துப்புரவு ஊழியர்களின் துணையோடு தனது வீட்டிலிருந்து எடுத்து வந்த ( விளக்குமாறு ) துடைப்பான்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். இதையடுத்து அப்பகுதி  தூய்மையாக காட்சியளித்து வருகிறது. பேரூராட்சி ஊழியர்களோடு களத்தில் கூட நின்று பணிபுரியும் இவரது பொதுநலப்பணியை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்துகின்றனர். இவரைப்போன்று அதிரையின் பிற பகுதிகளின் வார்டு கவுன்சிலர்களும் அதிக ஈடுபாட்டோடு பொதுநலப்பணி ஆற்ற முன்வர வேண்டும்' என மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டனர்.
 
 

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    சங்கை மிகு சஹர் ரமலான்.

    அய்யா, தலைப்பை பார்த்ததும் பயந்தோ பயமாக இருக்கின்றது. உள்ளே சென்றால் வாழ்த்தலாம் போல் இருக்கின்றது.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

    ReplyDelete
  2. // தலைப்பை பார்த்ததும் பயந்தோ பயமாக இருக்கின்றது. உள்ளே சென்றால் வாழ்த்தலாம் போல் இருக்கின்றது.//

    வாழ்த்தலாம் போல இருக்கிறது அல்ல வாழ்த்தலாம். வாழ்த்தனும் வாழ்த்திப் பாராட்டியே ஆகணும். சுற்றுச்சூழல்,பேணுதல் மரம் நடுதல் ஆகியவை சிறந்த பணிகள்.

    பாராட்டுவோம்.

    ReplyDelete
  3. தெருத்தெருவாய் கூட்டுவது பொது நலத்தொண்டு. ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுய நலமுண்டு ( மோடி ).சமூக அக்கறைக் கொண்ட 15 வது வார்டு கவுன்சிலர் அப்துல் லத்திப் அவர்களுக்கு வாழ்த்துக்கள் -நன்றியும் கூட.

    ReplyDelete
  4. கெஜ்ரிவால் கோபித்துக் கொள்வார் விலக்கு மாறு வேண்டாம் கூட்டு பிரஸ் போதும். துணியை சுத்தம் செய்ய FAE சோப்பு தூள்பயன்படுத்துங்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...