Pages

Thursday, July 9, 2015

ஆம்பூரில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் :இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை !

ஆம்பூரில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை ரமலான் கொண்டாடும் வகையில் உடனே விடுதலை செய்ய வேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை

தஞ்சை வடக்கு மாவட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கும்பகோணம் மாநகரில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் கலந்து பின் செய்தியாளர்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய மத்திய மண்டல அமைப்பாளர்  எம்.அப்துல் ரஹ்மான் Ex .MP  கூறியதாவது ,

"இன்று இங்கு நடைபெற்ற இப்தார் நிகழ்வில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமூக மக்களும் ,அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டது தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை யாராலும் கெடுக்க முடியாது என்பதை உறுதி படுத்தும் வண்ணம் அமைந்தது.

ஆனால் ,ஆம்பூரில் சமூக நல்லிணக்கத்திற்கு மாற்றான நிகழ்வுகள் நடக்கின்றன . ஆம்பூர் ஷமீல் அஹமது மரணத்திற்கு காரணமான மார்டின் என்ற போலீஸ் அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் ; அதனை தொடர்ந்து நடைபெற்ற அசம்பாவித சம்வத்திற்கு தொடர்பில்லாத அப்பாவி மக்களை கைது செய்தது தவறு ,புனித மிக்க ரமலான் மாதத்தில் அப்பாவிகளை கைது செய்து சிறையில் அடைத்தது கண்டிக்கத்தக்கது .அப்படி கைது செய்த அப்பாவிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் . அப்பாவிகளை ரமலான் கொண்டாடும் வகையில் விடுதலை செய்ய வேண்டும்.144 தடை உத்தரவை உடனே நீக்கவேண்டும் .தமிழக முதல்வர் உடனே இந்த விசயத்தில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்

இப்தார் நிகழ்விற்கு மாவட தலைவர் முஹம்மது சுல்தான் தலைமை தாங்கினார் .மாநில கல்விப்பணி செயலாளர் துவக்கவுரை நிகழ்த்தினார் . மாவட்ட செயலளார் பஷீர் வரவேற்புரை நிகழ்த்தினார் .மாவட்ட இணை செயலாளர் ராஜாஜி நன்றி கூறினார் .மாவட்ட பொருளாளர் சுல்பிகார் , முஹம்மது உசேன் ,எஸ்.கே.எம்.ஹபிபுல்லா , மக்கி பைசல் , அமீன் ,நூருல்லா உள்ளிட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகளும் , திமுக மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் , சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன் ,கோவி.செழியன் , த.மா.கா. மூத்த தலைவர் ஜி.ஆர் .மூப்பனார் , காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராம்குமார் , விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் தமிழினி , இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் ஆகியவற்றின் மாவட்ட செயலாளர்கள் ,தேமுதிக ,நீலப்புலிகள் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் ஜமாஅத் நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...