Pages

Sunday, July 26, 2015

குற்றால சாரல் விழா - குவிந்த அதிரையர்கள்!

குற்றாலத்தில் சீசன் உச்சத்தில் உள்ளதாலும், ரமலான் நோன்பு முடிந்துள்ள நிலையில் அதிரையர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

பலர் வெளிநாடுகளிலிருந்து பெருநாளை முன்னிட்டு ஊர் வந்தவர்கள் பெருநாள் முடிந்த கையோடு குற்றால அருவிக்கு படையெடுத்துவிட்டனர்.

இதற்கிடையே குற்றாலத்தில் நேற்று முதல் சாரல் விழா தொடங்கியது. இவ்விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.

மேலும் சாரல்விழாவையொட்டி பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.- ஞாயிரன்று குற்றாலம் சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலை கண்காட்சி-2015 காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு நீச்சல் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு மாலை குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது. அன்று இரவு 10 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இவ்விழா வரும் 1-ந்தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...