Pages

Wednesday, July 1, 2015

பட்டுக்கோட்டையில் தேசிய மருத்துவர்கள் தின விழா !

பட்டுக்கோட்டை ஜே.சி.ஐ பட்டுக்கோட்டை விங்ஸ் சார்பில் பட்டுக்கோட்டையில் தேசிய மருத்துவர்கள் தின விழா இன்று நடைபெற்றது.

விழாவில் ஜே.சி.ஐ பட்டுக்கோட்டை விங்ஸ் தலைவர் கே.வெங்கடேஷ் தலைமை வகித்து பட்டுக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். கு. அறிவழகன் அவர்களின் பொது சுகாதாரம், டெங்கு காய்ச்சல் ஒழிப்பு, பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு பணிகளை பாராட்டினார்.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கு. அறிவழகன் பேசும் போது:
பாரத ரத்னா. டாக்டர் பிதன் சந்திரராய் அவர்களின் பிறந்த தின மற்றும் நினைவு தினமான ஜுலை1-ம் தேதி இந்தியா முழுதும் தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. கல்கத்தா மற்றும் லண்டனில் மருத்துவம் பயின்ற  டாக்டர் பி.சி. ராய் கல்கத்தா மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். காந்தியடிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டார். பின்னர் மேற்கு வங்க முதல்வராக இருந்து சேவையாற்றினார். டாக்டர் பி.சி. ராயின் வழியில் டாக்டர்கள் சிறந்த சேவை புரிந்து வருகின்றனர். இளம் தலைமுறையினரும் மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்றார்.’’

விழாவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ.விவேகானந்தம், சமுதாய செவிலியர் ராணி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவர்களின் சேவையை பாராட்டினர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...