Pages

Monday, July 6, 2015

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு TNTJ நிதி உதவி !

தஞ்சாவூர் கீழவாசல் தைக்கால் தெருவில் கடந்த ஜூன் மாதம் 29 ந்தேதி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் எட்டு வீடுகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதில் வீட்டில் இருந்த பல இலட்சம் பொருட்கள் நாசமானது.
   
தகவல் அறிந்து வந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சம்பவ தினத்தன்றே பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் உடனடி தேவைக்காக துணிமணிகள், அரிசி மளிகை பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூபாய் 34,000 ஆகியவற்றை பாதிக்கப்பட்ட 8 குடும்பத்தினரிடம் வழங்கினர்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகிகள் டிஎன்டிஜே மாநில தலைமைக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மாநில தலைமையகம் மூலமாக வந்த ரொக்கம் ரூபாய் 1 இலட்சத்து 40 ஆயிரம், கிளை மூலம் வசூலான ரொக்கப்பணம் 1 இலட்சத்து 20 ஆயிரம், நன்கொடையாளர் வரவு 80 ஆயிரம் ஆக மொத்தம் 3 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 225 கிலோ அரிசி, போர்வைகள், பாத்திரங்கள், துணிமணி, உணவுப்பொருள்கள் உள்ளிட்டவை தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணவேணி, யூசுப், அப்துல்லா, சித்திக், சிராஜ், பாத்திமா கனி, சுபைதா பீவி, அம்மா ஜான் உள்ளிட்ட எட்டு குடும்பங்களுக்கும் டிஎன்டிஜே தஞ்சை கிளை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பகிர்ந்து வழங்கப்பட்டது.
     
நிகழ்ச்சியில் டிஎன்டிஜே மாவட்ட தலைவர் சம்பை ஹெச்.சாதிக் பாட்ஷா, மாவட்ட செயலாளர் தஞ்சை முஜிபுர் ரஹ்மான், துணைத்தலைவர் பேரை சேக்தாவூத், துணை செயலாளர் அதிரை ராஜிக், தஞ்சை கிளை தலைவர் சாகுல், செயலாளர் ரிஸ்வான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...