.

Pages

Monday, August 31, 2015

ஜீப் ரைடில் சிக்கிய சுற்றுலா பயணிகள் !

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நெல்லை மாவட்டம் கடையநல்லூருக்கு சென்ற அதிரையர்கள் தங்களுக்கு கிடைத்த பொன்னான நேரத்தில் சுற்றலா பகுதியாகிய இந்த பகுதியில் அமைந்துள்ள குண்டாறு அணையின் அழகை ரசித்து மகிழவும், அங்குள்ள படகில் சவாரி செய்யவும், மலைப்பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழவும் திட்டமிட்டனர்.

குண்டாறு அணை - மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் குற்றாலத்திலிருந்து செங்கோட்டை செல்லும் சாலையின் இடதுபுறம் அமைந்துள்ள வல்லம் பகுதியை அடுத்து கண்ணுப்புளிமெட்டில் அமைந்துள்ளது. சுமார் 36.10 அடி உயரம் கொண்ட இந்த அணை முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் கடந்த 1973 ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. இந்த அணையிலிருந்து வெளியேறும் நீர் இந்த பகுதியில் நடைபெறும் விவசாயத்திற்கு பயனளித்து வருகிறது.

சுற்றலா பயணிகள் பாதுகாப்பாக நீராடும் வகையில் அணைக்கட்டின் மேற்பகுதியில் உள்ள வனப்பகுதியில் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் மலைப்பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றுவர ஜீப் வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பயணிப்பதற்காக 10 க்கும் மேற்பட்ட ஜீப் வாகனங்கள் இங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு கட்டணமாக ₹ 400 முதல் ₹ 600 வரை வசூலிக்கின்றனர். சீசன் நேரத்தில் சற்று கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும். பயணிகளின் சாமர்த்தியத்தை பொருத்து கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகிறது.

ஜீப் ரைடில் 6 முதல் 8 பேர்கள் வரை பயணம் செய்யலாம். கரடு முரடான மலைப்பாதை என்பதால் அனுபவமிக்க ஓட்டுனர்கள் மூலம் ஜீப் வாகனங்கள் இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் சுமார் 1 மணி நேரம் வரை குளித்துவிட்டு திரும்பும் வரை ஜீப் வாகன ஓட்டுனர்கள் நீர்வீழ்ச்சியின் அருகில் பொறுமையுடன் காத்துக் கிடக்கின்றனர். சீசன் நேரத்தில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றலா பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிக்கு வருகை தருகின்றனர்.

சரி... சரி... பதிவின் தலைப்பிற்கும், வாசிக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமில்லையே என ஆதங்கப்படுவது காதிலே நல்லா கேக்குது. :)

சரி விசயத்திற்கு வருவோம்...

ஜீப் ரைடில் மகிழ்ச்சியுடன் நீர்வீழ்ச்சிக்கு பயணித்த அதிரையர்கள் அங்குள்ள கரடு முரடான மலைப்பாதையின் குறிப்பிட்ட செங்குத்தான இரண்டு அடி உயரத்தை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் ஜீப் வாகனம் நகர முடியாமல் வழியில் நின்றது. வாகனத்தில் அமர்ந்திருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளத்தில் சிக்கிய வாகனம் நகருவதில் சிக்கல் நீடித்ததால் ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. அடுத்த சில நிமிடங்களில் வாகன ஓட்டுனரின் சாமர்த்தியத்தாலும், பயணிகள் கூறிய அறிவுரையாலும் வாகனம் இலகுவாக மீட்டெடுக்கப்பட்டு மெதுவாக நகர்ந்து சென்றது.

அபூ அஜீம்
 
 
 
 
 

25 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் நடந்த பள்ளிவாசல் படுகொலை காட்சிகள்: நேரடி விசிட் !

'கருணா அம்மான்' போன்ற சந்தர்ப்பவாத பயங்கரவாதிகளும் அவனுடைய எதிர்அணியினரும் இந்திய ஊடகங்களால் மீண்டும் தூக்கிப்பிடிக்கப்படுகின்ற இந்த வேளையில், இந்த கோழைகள் ஒன்றாக இருந்தபோது முஸ்லீம்களுக்கு எதிராக நடத்திய மிகச்சில வன்முறைகளையாவது நினைவுகூர்வது காலத்தின் கட்டாயமாகும். பிராபகரன் என்ற மனித உயிர்களின் மதிப்புத்தெரியாதவனுக்காக இந்த படுகொலைகளை அரங்கேற்றிவன் தான் அன்றைய கிழக்கு மாகாண பயங்கரவாதிகளின் பொறுப்பாளன் 'கருணா' என்கிற இந்த கருணா அம்மான்.

நம் இந்தியாவில் இந்துக்கள் வேறு, இந்துக்களின் பெயரைச் சொல்லி ஆட்டம்போடும் இந்துத்துவ பயங்கரவாதிகள் வேறு என்று புரிந்து வைத்துள்ளதை போன்றே விடுதலைப்புலிகள் வேறு, ஈழத்தமிழர்கள் வேறு என்ற அடிப்படை வித்தியாசத்தை புரிந்து கொண்டவர்களாக தொடர்க,

அப்படியானால், விடுதலைப்புலிகளை ஈழத்தமிழர்கள் ஆதரிக்கவே இல்லையா? என்ற கேள்வி வருகிறது இல்லையா! ஆம், நமது இந்திய மக்களில் சுமார் 31 சதவிகிதத்தினர் 'அச்சே தீன்' வரும், 15 லட்சம் வரும் என ஏமாறவில்லையா? அதைப்போன்றே மிகச்சிலர் கோழைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று புரிந்து கொள்க. மிகப்பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள் வேறு வழியின்றி அவர்களின் சர்வாதிகாரத்தை விழுங்கிக் கொண்டு நித்தமும் செத்துப்பிழைத்து 'மத்தளத்திற்கு இருபுறமும் இடி' என வாழ்ந்தவர்கள்.

மிகச்சரியாக 25 ஆண்டுகளுக்கு முன், 1990 ஆம் வருடம், ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதியன்று  தான் இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள காத்தான்குடி என்ற முஸ்லீம்கள் செறிந்துவாழும் ஊரில், பள்ளிவாசல்களில் இஷா தொழுது கொண்டிருந்த அப்பாவி, நிராயுதபாணி முஸ்லீம்கள் சுமார் 147 பேர்கள் விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில் 7,8 வயது பாலகர்களும் அடக்கம். யாழ்ப்பாணத்தில், மன்னாரில் விரட்டியடித்ததைப் போல் காத்தான்குடி முஸ்லீம்களையும் அச்சுறுத்தி மொத்தமாக ஊரைவிட்டு விரட்டுவதற்காக தொடுக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனம் அது.

(இதேபோன்றதொரு அவலம் இந்திய வரலாற்றிலும் மறைந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம், தேவ்பந்த் நகரில் உள்ள ஒரு பள்ளியின் பெயர் "ஹூனி மஸ்ஜித்" அதாவது இரத்தப்பள்ளி. இந்தியாவில் சுதந்திர முழக்கங்கள் சுடர்விடத் துவங்கிய நேரத்தில் பள்ளிவாயில்களே அதன் பிரச்சாரக் களங்களாக திகழ்ந்தன. இதனால் ஆத்திரமுற்ற ஆங்கிலேயர்கள் அங்கே தொழுது கொண்டிருந்த முஸ்லீம்களை சுட்டுக்கொல்ல, அந்தப்பள்ளியும் இன்றளவும் முஸ்லீம்களின் இரத்தக்கறையுடன் சுதந்திர போராட்ட வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட சின்னமாக நின்று கொண்டுள்ளது)

இலங்கை அரசாங்கம் சேதமடைந்த பள்ளிவாசல்களை புனரமைப்பு செய்திட முன்வந்தும் முஸ்லீம்களால் மறுக்கப்பட்டு, விடுதலைப்புலிகள் எனும் கோழைகள் நடத்திய படுகொலைகளின் சுவடுகள் இன்னும் நமது பள்ளிவாசல்களில் வருங்கால தலைமுறைக்கு வன்முறை கும்பலின் வரலாறு சொல்லும் சாட்சிகளாய் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம்கள் அனைவரும் ஒரே நீண்ட கபுரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை முஸ்லீம்களால் ஒவ்வொரு வருடமும் படுகொலை நடந்த தினம் 'ஷூஹதாக்கள் தினமாக' (உயிர் தியாகிகள் தினமாக) நினைவுகூறப்பட்டும் வருகின்றன.

மிக அதிகமானோர் படுகொலை செய்யப்பட்ட காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளியில் எடுக்கப்பட்ட படங்கள்
 
ஷூஹதாக்கள் அனைவரும் ஒரே கபுரில் சுவற்றோரம் வரிசையாக  அடக்கம் செய்யப்பட்ட மீரா ஜூம்ஆ பள்ளி மையவாடி
இது மட்டுமல்ல, ஹஜ் புனித யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிய காத்தான்குடி முஸ்லீம்களையும், அவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்து வர 2 பஸ்களில் சென்ற குடும்பத்தினர்களையும் கடத்திக் கொண்டு போய் 'காண பிணமாக்கினர்'. இறுதிப்போரில் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தான் குழந்தைகள் உட்பட சுமார் 60 பேர் அனைவரும் படுகொலை செய்யப்பட்டு ஒரு முந்திரிக்காட்டில் புதைக்கப்பட்டுள்ள கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

(இதேபோல் இந்தியாவிற்குள் காலணி ஆதிக்க ஆசையோடு முதன்முதலில் வந்திறங்கிய கொடூரன் 'வாஸ்கோட கமா' என்ற சண்டாளன், ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிய முஸ்லீம்களை கடலில் வைத்தே கொன்றொழித்து விட்டு அவர்களின் கப்பல்களையும் பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றான்)

கெடுவான் கேடு நினைப்பான் என்பதற்கிணங்க, தமிழர்கள் பெரும்பானமையினராக வாழும் பிரதேசங்களில் ஈழத்தமிழர்களை தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது என்ற மோசமான சிந்தனையின் வெளிப்பாடாக பல முஸ்லீம் கிராமங்களை இரவோடு இரவாக மக்களை கொன்று, கொள்ளையடித்து, தீயிலிட்டு அங்கே மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் இன்றி இன சுத்திகரிப்பு செய்தனர், மேலும் யாழ்ப்பாணம், மன்னார் போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வந்த முஸ்லீம்களை துப்பாக்கிமுனையில், சில மணிநேர அவகாசத்தில் அவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு அகதிகளாக விரட்டியடித்தனர்.

ஆகக்கடைசியாக, திரிகோணமலை மாவட்டம் 'மூதூர்' என்ற கடற்கரை பிரதேச முஸ்லீம்களை துப்பாக்கி முனையில் அனைத்தையும் பறித்துக் கொண்டு அகதிகளாக வெளியேற்றிய நிகழ்வுடன், கோழைப்புலிகளின் இறுதி அழிவுக்கான சமர்களம் ஆரம்பமாயிற்று. விளைவு முஸ்லீம்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு ஈழத்தமிழர்கள் மட்டுமே இருந்த பிரதேசங்கள் இலங்கை ராணுவத்தின் மிக எளிய வேட்டைகாடுகள் ஆயின என்பதை காலம் கண்கூடாக கண்டது.

சுருக்கமாக, ஈழத்தமிழர் விடுதலைக்காக போராடிய அனைத்து இயக்கங்களையும் அதன் தலைவர்களை கொன்றொழித்தவர்கள். அரசியல்ரீதியாக, ஜனநாயகரீதியாக செயல்பட்ட அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களையும் கொன்றொழித்தவர்கள், வீட்டுக்கு ஒருவர் என ஈழத்தமிழ் சிறுவர்களையும், சிறுமிகளை கடத்திச் சென்று கட்டாய பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தியவர்கள், கருவுற்ற ஈழத்தமிழ் இளம்பெண்களை மரத்திலிருந்த குதிக்கச் செய்து கருவை கலைத்து இயக்கத்தில் வலுக்கட்டாயமாக இணைத்தவர்கள், தன்னுடைய நிழலாக இருந்த மாத்தையா போன்ற பலரை அதிகார போட்டிக்கு பயந்து துரோக குற்றம் சுமத்தி கொன்றொழித்தவர்கள், திலீபன் போன்ற அவர்களின் அரசியல் பரிவு தலைவர்களை உண்ணாவிரதத்தின் மூலம் மடியவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள், வணிகர்கள், செல்வந்தர்களை கடத்தி இயக்கத்திற்காக தொடர்ந்து பணம் பறித்தவர்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஈழத்தமிழ் மக்கள் சம்பாதிப்பதில் சரிபாதி சம்பளத்தை கட்டாயப்படுத்தி பிடிங்கிக் கொண்ட அராஜகவாதிகள்..

கடல்தாண்டி நம் இந்திய மண்ணிற்குள் பல பயங்கரவாத செயல்களை புரிந்தவர்கள், நமது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை மனித வெடிகுண்டு மூலம் சிதறடித்தவர்கள் என இவர்களின் அட்டூழியங்களை இன்னும் பட்டியலிட்டுக் கொண்டு போகலாம்.

முத்தாய்ப்பாக, எந்த ஈழ மக்களுக்காக போராடுவதாக சொன்னார்களோ அதே ஈழமக்களை இறுதிப்போரின் போது மனித கேடயமாக பயன்படுத்தி தங்களை காப்பாற்றிக் கொள்ள முனைந்த மகா தைரியசாலிகள், இவர்களுடைய இந்த இழிசெயலால் தான் பல்லாயிரக்கணக்கான அப்பாவி ஈழத்தமிழர் மாண்டனர்.

ஈழமக்களின் துயருக்கு காரணமான இந்த வில்லன்கள் மட்டுமே 'கதாநாயகர்களாக' தமிழக ஊடகங்களாலும், அவர்களின் தமிழக ஆதரவாளர்களாலும் நம் தமிழகத்தில் பிம்பம் ஏற்படுத்தப்பட்டு நம்ப வைக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவு தான் இன்றைக்கும் பல தமிழார்வலர்கள் இவர்களை ஆதரிக்க காரணமாயின.

விடுதலைப்புலிகளும் தமிழர்களே என்பதற்காக அவர்களை இனவுணர்வின் அடிப்படையில் நேசிக்கும் எம்முடைய தொப்புள்கொடி உறவுகளான தமிழ் சகோதரர்களை வேண்டிக் கொள்கின்றோம், ஒருமுறையாவது ஈழ மண்ணுக்கு நேரடியாக சென்று விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் இடையில் சுமார் 30 வருடங்களாக மாட்டிக் கொண்டு ஈழத்தமிழர்கள் பட்ட கஷ்டங்களை தெரிந்து கொண்டு வாருங்கள், அதில் இலவச இணைப்பாய், காரணமேயின்றி விடுதலைப்புலிகள் முஸ்லீம்களுக்கு செய்த கொடுமைகளின் பட்டியலும் சேர்ந்தே வரும்.

குறிப்பு:
1. ஒரு சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒரு ஆயுதக்குழு இன்னொரு சிறுபான்மை இனம் மீது நடத்திய தொடர் இன சுத்திகரிப்பு தாக்குதல்களை தமிழகத்தில் அவர்களை ஆதரித்த / எதிர்த்த எவருமே இன்று வரை கண்டிக்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

2. காத்தான்குடி படுகொலைகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள விரும்புவோர் கூகுளில் kattankudy massacre என தேடினால் இன்னும் பல விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

களத்திலிருந்து
மவ்லவி அப்துல் ஹமீது, சலாவுதீன் காக்கா உதவியுடன்
அதிரை அமீன்

படங்கள்
J. ஜமால் முஹமது

காதிர் முகைதீன் கல்லூரி துணை முதல்வர் இல்லத் திருமண விழா நிகழ்ச்சி !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வரும், வேதியியல் துறை தலைவருமாகிய முனைவர் ஏ.எம் உதுமான் முகைதீன் இல்லத் திருமண விழா நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது.

இதில் ஏ.எம் உதுமான் முகைதீன் அவர்களின் புதல்வர் இன்ஜினியர் ஏ.யூ அசாருதீன் மணமகன் மற்றும் கே.எஸ் ஜூஹி ஜைனப் என்ற மணமகளுக்கும், ஏ.எம் உதுமான் முகைதீன் அவர்களின் புதல்வி ஏ.யூ ரஹ்மத் மணமகள் மற்றும் இன்ஜினியர் எம்.எஸ் முஹம்மது பைசல் என்ற மணமகனுக்கும் திருமணம் நடைபெற்றது.

இதில் ஆலிம்கள் மற்றும் கடையநல்லூர் ஜமாத்தார்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் இனிதே நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் அதிரை காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், ஆசிரியர் ஆசிரியைகள், அதிரையின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமண விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வர் ஏ.எம் உதுமான் முகைதீன் மற்றும் குடும்பத்தினர் அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.
 
 
 
 
 
 
 

மொபைல் டச்சு வேண்டாம்.


#மொபைல் டச்சு வேண்டாம்.
‪#மெய் டசசு வேண்டும்

நன்றி இணையம்

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Cent

Sunday, August 30, 2015

கோழிக் குஞ்சு- சிக் ரன்!


சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் ஒரு பெரிய லாரி கோழிக் குஞ்சுகளை ஏற்றி வந்துகொண்டிருந்தது. திடீரென்று வண்டி கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்துவிட்டது. லாரியில் இருந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான கோழிக் குஞ்சுகள் வெளியே ஓடி வந்தன. அந்தப் பகுதியே மஞ்சள் பந்துகள் உருண்டோடி வருவது போலக் காட்சியளித்தது. அருகில் இருந்த மக்கள் பெட்டிகள், வாளிகள், பைகளில் கோழிக் குஞ்சுகளை அள்ளிச் சென்றனர். லேசான காயம் அடைந்த ஓட்டுனர், கோழிக் குஞ்சுகளைக் காப்பாற்ற வழி தெரியாமல் அப்படியே அமர்ந்துவிட்டார்.

நன்றி தி இந்து.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.

Saturday, August 29, 2015

நாசா எச்சரிக்கை: 3 அடிகள் வரை உயரும் கடல் மட்டம்


புவி வெப்பமடைதலால் உருகும் பனி மலைகள், மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய காரணங்களால் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த  2013-ம் ஆண்டு பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகளின் குழு கடல் மட்டம் உயர்வு பற்றி ஆய்வு நடத்தியது.  அதில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டத்தின் அளவு ஒரு அடியில் இருந்து மூன்று அடியாக உயரலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அது எவ்வளவு விரைவாக நடைபெறும் என்பதை உறுதி செய்ய முடியாது. கிரீன்லாந்து  மற்றும் அண்டார்டிகா போன்ற பகுதியில், பனிப்பாறைகள் உருகியதால் கடல்மட்ட அளவு 3 அங்குலமாக உயர்ந்துள்ளது.என்று தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் மேலும் 3 அடிகள் வரை கடல் மட்டம் உயர்ந்தால் அது கோடிக்கணக்கான மக்களுக்கு ஆபத்தானதாக மாறும் என்று நாசா கவலை தெரிவித்துள்ளது. ஆனால் விஞ்ஞானிகளோ இனி இதை தடுத்து நிறுத்துவது என்பது மிகவும் காலதாமதமானது, அதற்கான  காலத்தை நாம் எப்போதோ கடந்து விட்டோம் என்று ஆதங்கமடைகின்றனர்.

நன்றி மாலை மலர்.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.
 

Friday, August 28, 2015

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை!

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு கீழ்க்கணட சிறப்பு மருத்துவர்கள் வருகை தர உள்ளார்கள்.

Dr.கீதா சரவணன் M.B.B.S, D.G.O,I.C.G.O (மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர்)
பார்க்கும் நாட்கள் பிரதி திங்கள்,புதன் மற்றும் வெள்ளிக்கிழமை மாலை 04:00 P.M to 06:00 P.M

Dr.  M..சந்திரன் M.B.B.S பொதுநல மருத்துவர்
மாலை 05:00 P.M to 08:00 P.M  (ஞாயிறு நீங்களாக)

முக்கிய தகவல்: ஷிஃபா மருத்துவமனை ஸ்டார் இன்சூரன்ஸ் அங்கீகாரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 9வது சுற்று செப்டம்பர் 1-இல் துவக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கோமாரிநோய் கால் மற்றும் வாய் நோய் அல்லது காணைஎன்றும் அழைக்கப்படும். இந்தநோய் நம் நாட்டில் கலப்பினமாடுகளைஅதிகம் தாக்கிகால்நடைவளர்ப்போருக்குபொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பைஏற்படுத்துகிறது. பொதுவாக இந்தநோய் குளம்புகள் கொண்டகால்நடை இனங்களைஅதிகம் தாக்குகின்றன. இந்தநோயினால் கறவைமாடுகளில் பால் உற்பத்திகுறைகிறது. சினைப்பிடிப்பதுதடைபடுகிறது. எருதுகளில் வேலைசெய்யும் திறன் குறைகிறது. இளங்கன்றுகளில் இறப்புஏற்படுகிறது.

இந்நோய் நச்சுயிரியால் (வைரஸ்) ஏற்படுகிறது.இந்தநோய் குளிர் மற்றும் பனிக்காலம்,நோய் பாதித்த இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்றகால் நடைவளர்ப்பு,நோய் பாதித்தகால் நடைகளைபிரித்துபராமரிக்காமல் இருத்தல் மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசிபோடாதிருத்தல் ஆகியகாரணங்களால் இந்நோய் பரவுகிறது.இந்தநோய் பாதித்த மாடுகளிலிருந்து மற்றமாடுகளுக்கு நேரடியாகதொற்றும் தன்மைகொண்டது. இந்நோய் விரைவாககாற்றின் மூலம் 60 கிமீபரவும் தன்மைகொண்டது.

இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சல், வாயிலிருந்து நுரைகலந்த உமிழ்நீர் நூல் போலஒழுகுதல்,வாயின் உட்பகுதி,நாக்குமற்றும் கால்நடை குளம்புகளின் நடுப்பகுதி, மடி ஆகிய இடங்களில் கொப்புளங்கள் தோன்றியபின் உடைந்துரணமாகமாறும். அசைபோடும் போதுமாடுசப்புகொட்டுவதுபோல் சப்தம் உண்டாகும். பாதிக்கப்பட்டபசுக்களின் கன்றுகளுக்குபால் குடிக்கவிடக்கூடாது. அவ்வாறுகுடித்தால் கன்றுகள் உடனடியாக இறந்துவிடும். இந்தநோய் கண்டகால்நடைகளைதனியாகவேறு இடத்தில் வைத்துதீவிரசிகிச்சைஅளிக்கவேண்டும். இந்தநோய் வராமல் தடுப்பதற்குகால்நடைகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை கால்நடைதுறையினரால் தடுப்பூசிபோடப்பட்டுவருகிறது.
இந்நோயினால் ஏற்படும் பொருளாதார இழப்பினை கருத்தில் கொண்டுதேசியகால் மற்றும் வாய் நோய் (கோமாரிநோய்) தடுப்பூசித்திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரைதமிழ்நாட்டில் 8 சுற்றுகள் கோமாரிநோய் தடுப்பூசிப் பணி ஒவ்வொருமார்ச் மாதம் 1-ஆம் தேதிமுதல் 21-ஆம் தேதிவரையிலும், ஒவ்வொரு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதிமுதல் 21-ஆம் தேதிவரையிலானகாலங்களில் கோமாரி நோய் தடுப்பூசிமுகாம்கள்செம்மையாகசெயல்படுத்தப்பட்டுவருகிறது.

தற்பொழுது கோமாரிநோய் தடுப்பூசிமுகாம் 9வது சுற்றுசெப்டம்பர் மாதம் 1-ஆம் தேதிமுதல் 21-ஆம் தேதிவரைதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 87 ஆயிரம் எண்ணிக்கையிலான பசு மாடு மற்றும் எருமைமாடுகளுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 77 தடுப்பூசி பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் குளிர் நிலையில் ஒவ்வொரு கிராமத்திலும் இக்குழுவினரால் தற்போது உள்ள அனைத்து பசுவினம் மற்றும் எருமையினங்களை கணக்கிட்டு தடுப்பூசி போடப்பட உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் 100மூதடுப்பூசி பணி மேற்கொள்ளும்பொருட்டும்,விவசாயிகளுக்குவிழிப்புணர்வுஏற்படுத்தும் வகையிலும் அனைத்து கிராமங்களிலும் சிறப்புகிராம சபை கூட்டம் (29.08.2015) ஆகஸ்ட் 29-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறஉள்ளது. இதில் அனைத்துவிவசாயிகளும் பங்கேற்று கால்நடை மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளின்படிகால்நடைகளைஅந்தந்தகிராமங்களில் தடுப்பூசி போடப்படும் நாட்களில் அழைத்துச் சென்று கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

இது ரேடியோ சைனா.


சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 1 ஆம் நாள் துவங்கியது. நாள்தோறும் இந்தியா மற்றும் இலங்கைக்கு, 4 மணி நேர சிற்றலை ஒலிபரப்பும், இலங்கைக்கு 4 மணி நேரப் பண்பலை நிகழ்ச்சியும், ஒலிபரப்ப்ப்படுகின்றன. மேலும், இணையத்தளம், வீட்டியோ, செல்லிட பேசி, சீனத் தமிழொலி எனும் இதழ் முதலிய பல்லூடக சேவைகள் மிகவும் வரவேற்கப்படுகின்றன.

இணையத்தளம்http://tamil.cri.cn

சிற்றலை ஒலிபரப்பு
இந்திய நேரம், இரவு 730-930
31.35 மீட்டர்—9570 கி.ஹர்ட்ஸ்
31.04 மீட்டர்—9665 கி.ஹர்ட்ஸ்

காலை 730-930
22.06 மீட்டர்—13600 கி.ஹர்ட்ஸ்
21.84 மீட்டர்—13735 கி.ஹர்ட்ஸ்

இலங்கை பண்பலை 97.9
இலங்கை நேரம், பிற்பகல் 1:30-3:30
இரவு 7:30-9:30.

49 ஆண்டுக்கால வளர்ச்சி மூலம், எங்கள் நேயர்கள், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, செளதி அரோபியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், பரவியுள்ளனர். தமிழ் நேயர்களின் அணி இடைவிடாமல் பெருகியுள்ளது. நேயர் மன்றங்களின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட நேயர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 300க்கும் கூடுதலாகும். ஆண்டுதோறும் தமிழ் நேயர்களின் கடித எண்ணிக்கை சீன வானொலியின் கடித எண்ணிக்கை வரிசையில் முன்னணியில் உள்ளது.

தமிழ் ஒலிபரப்பு தென்னாசியா ஒலிபரப்பு மையத்தைச் சேர்ந்தது. தற்போது, தமிழ்ப் பிரிவில் 19 சீனப் பணியாளர்களும் 2 தமிழ்ப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
நன்றி: சீன வானொலி.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.

Thursday, August 27, 2015

மரண அறிவிப்பு [சி.ந.செய்யது முஹம்மது சுரைக்கா கொல்லை]

சுரைக்கா கொல்லையைச் சேர்ந்த மர்ஹூம் சி.ந.நல்ல அபூபக்கர் அவர்களின் மகனும், மர்ஹூம் சி.ந.மீராசாஹிப் , சி.ந.சுல்தான் ஆகியோரின் சகோதரரும், அப்துல் ரஹ்மான் அவர்களின் மாமனாரும், அஷ்ரப், சுஹைப் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி. சி.ந. செய்யது முஹம்மது அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் நல்லடக்கம் குறித்த தகவல்  பின்பு அறிவிக்கப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அதிரையை கலக்கும் ராயல் என்பீல்டு !

நமதூர் இளைஞர்களுக்கு எப்போதும் ராயல் என்பீல்டு பைக் மீது தனி மவுசு இருக்கும். லைப் ஸ்டைல் இமேஜ் எப்போதும் இருப்பதால் தொடர்ந்து அதை வாங்குகின்றனர். குடும்பத்தினரோடு செல்பவர்களோ, ஷாப்பிங் செல்லவோ இந்த பைக்கை வாங்குவோர் ரொம்ப கம்மிதான். வித்தியாசமான ரசனையுள்ளோரே இந்த பைக்கை விரும்பி வாங்குவார்கள்.

புதிய பைக் வாங்குபவர்கள் திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டீலர்களிடம் முன்பதிவு செய்து ஆறு மாதங்கள் வரை காத்திருந்த பின்னரே பைக் டெலிவரி செய்யப்படுகிறது. அதிரை இளைஞர்கள் மத்தியில் ராயல் என்பீல்டு பைக் பயன்படுத்தி வருவது தற்போது அதிகரித்து வருகிறது.

அதிரையில் உலாவரும் ராயல் என்பீல்டு பைக்குகளின் புகைப்படங்களின் தொகுப்பு:

புதிய மாடலாக வந்துள்ள புல்லட்டில் 20 லிட்டர் பெட்ரோல் டேங்க் பிரமாண்டமாக இருக்கிறது. சின்ன புரொஜெக்டர் லைட்டுடன் புதிய ஹெட்லைட் முன்பக்கத்தை அழகாக்கிறது. இரட்டை குடுவை டயல்கள். ஒன்று டிஜிட்டல், மற்றொன்று அனலாக். டயல்களுக்கு நடுவே கார்களில் இருப்பது போன்று வார்னிங் லைட் சுவிட்ச் உள்ளது. இந்த ஸ்விட்சை தட்டினால் காரில் உள்ளதுபோல் ஒரே நேரத்தில் நான்கு இன்டிகேட்டர் லைட்டுகளும் அணைந்து, அணைந்து எரியும்.

உயரமானவர்கள் மட்டுமின்றி உயரம் குறைவானவர்களும் ஓட்டும் வகையில் புதிய தண்டர்பேர்டு இருக்கை உயரமும் குறைக்கப்பட்டுள்ளது. எடை 195 கிலோ. சிசி 499. இன்ஜன் சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிலேட்டரை முறுக்கினாலே வேகம் பிய்த்து கொண்டு போகிறது. அதிகப்பட்சமாக மணிக்கு 130 கி.மீ. வேகத்துக்கு செல்லலாம். இரண்டு வீல்களிலும டிஸ்க் பிரேக் உள்ளது. வீல் பேஸ் 20 மி.மீ. பழைய பைக்கிலிருந்து குறைக்கப்பட்டு இருப்பதால் வளைவுகளில் எளிதாக ஓட்ட முடியும். லிடடருக்கு 30 கி.மீ. மைலேஜ் தரும் என்கிறார்கள் என்பீல்டு பிரியர்கள். இதன் விலை ₹ 1.40 லட்சத்தை தொடும்.

குறிப்பு: எங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள்  ராயல் என்பீல்டு பைக்குகளின் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் பதிவில் இணைக்கப்படும்.