Pages

Saturday, August 8, 2015

லாரி மீது 108 ஆம்புலன்ஸ் மோதி மதுக்கூரை சேர்ந்த 2 பேர் பலி: 4 பேர் படுகாயம்

மதுக்கூர் அருகே உள்ள படப்பைக்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி ராதிகா (28). இவர்களுக்கு நிதிதா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் ராதிகா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பட்டுக்கோட்டையில் இருந்து ஆம்புலன்ஸ் சென்றது. கர்ப்பிணி ராதிகாவை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் தஞ்சை ராசாமிராசுதார் ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருந்தது.

இதனை டிரைவர் மணிவேல் ஓட்டி வந்தார். மருத்துவ உதவியாளர் நீலகண்டன் ஆம்புலன்சில் முதல் உதவி சிகிச்சை அளித்து வந்தார். ராதிகாவுடன் அவரது கணவர் செந்தில் குமார், நாத்தனார்கள் தேவி, மணிமேகலை ஆகியோர் வந்தனர்.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஆம்புலன்ஸ் தஞ்சை அருகே உள்ள துறையூரில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இதில் டிரைவர் மற்றும் அதில் வந்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் ராதிகா மற்றும் மருத்துவ உதவியாளர் நீலகண்டன் ஆகியோர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தனர்.

இதையடுத்து டாக்டர்கள் ராதிகாவின் வயிற்றில் உள்ள குழந்தையை பரிசோதனை செய்த போது குழந்தையும் வயிற்றிலேயே இறந்தது தெரியவந்தது.

மேலும் செந்தில்குமார், அவரது சகோதரிகள் தேவி, மணிமேகலை, ஆம்புலன்ஸ் டிரைவர் மணிவேல் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி:மாலை மலர்

2 comments:

  1. வெறி மோசமான செய்தி, 108 ஆம்புலன்சில் தகுதி உள்ள ஓட்டுனர்களை அமர்த்துவது நல்லது.

    பிறந்தவர்கள் இறப்பதும், பிறக்கப்போகும் உயிர்கள் மாய்க்கப்படுவதும் கண்டிக்கத்தக்கது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...