Pages

Friday, August 7, 2015

சவுதியில் மசூதி மீது தற்கொலைப் படைத் தாக்குதல்: 15 பேர் பலி

தொழுகையில் ஈடுபட்டி இருந்தவர்கள் மீது தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் மொத்தம் 15 பேர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சவுதியின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்றின் ஒரு பகுதி பாதுகாப்பு படை வீரர்களின் தலைமையிடமாகவும் செயல்பட்டு வருகிறது. அந்த குறிப்பிட்ட மசூதியில் இன்று பாதுகாப்புப் படை வீரர்களும் மற்றவர்களும் வழக்கமான தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் 10 பாதுகாப்புப் படை வீரர்களும், அங்கு வேலை செய்து வந்த 3 பேரும் கொல்லப்பட்டனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...