Pages

Saturday, August 1, 2015

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு !

தஞ்சை தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் தேர்வு கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் கே.எம் பேராசிரியர் காதர் முகைதீன் தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில நிர்வாகி அதிரை எஸ்.எஸ்.பி நசுருதீன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவராக ஹாஜி பி.எஸ் அப்துல் ஹமீது, செயலராக ஜெய்னுல் ஆபிதின்,பொருளாளராக ஏ.எம் அப்துல் காதர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் மாவட்ட இளைஞரணித் தலைவராக 'மணிச்சுடர்' நிருபர் அதிரை சாகுல் ஹமீது தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில பிரதிநிதிகளாக அதிரை எஸ்.எஸ்.பி நசுருதீன், ஏ.எம் அப்துல் காதர், கே.கே ஹாஜா நஜுமுதீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அதிரை பேரூர் தலைவராக கே.கே
ஹாஜா நஜுமுதீன், செயலாளராக வழக்கறிஞர் ஏ. அப்துல் முனாப், பொருளாளராக சேக் அப்துல்லா மற்றும் அதிரை பேரூர் இளைஞரணித் தலைவராக சாகுல் ஹமீது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...