Pages

Saturday, August 1, 2015

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அதிரை பேரூர் நிர்வாகிகள் அறிவிப்பு !

தஞ்சை தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் தேர்வு கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் கே.எம் பேராசிரியர் காதர் முகைதீன் தலைமை வகித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில நிர்வாகி அதிரை எஸ்.எஸ்.பி நசுருதீன் முன்னிலை வகித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அதிரை பேரூர் தலைவராக கே.கே
ஹாஜா நஜுமுதீன், செயலாளராக வழக்கறிஞர் ஏ. அப்துல் முனாப், பொருளாளராக சேக் அப்துல்லா மற்றும் அதிரை பேரூர் இளைஞரணித் தலைவராக சாகுல் ஹமீது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள். சிதைந்து கிடக்கும் நம் இஸ்லாமிய சமுதாயத்தை ஒன்று படுத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு பெரும் முயற்சியை எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளது. இதை நமதூர் லீக் நிர்வாகிகள் முன்னுதாரணமாக இந்த தமிழ் நாட்டுக்கு செய்து காட்டவேண்டும் என்று வல்ல ரஹ்மானிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்.

    ஆங்கில பழமொழி ஒன்று உண்டு "UNITED WE STAND DIVIDED WE FALL" என்று. ஏக இறையோன் அல்லாஹ் அந்த ஒன்று படும் மனோநிலையை நம் அனைவருக்கும் தந்து அருள்வானாக. மார்க்க ரீதியான கருத்துக்கள், கொள்கைகள் மாறுபடலாம் ஆனால், சமுதாய ஒற்றுமை அவசியம். இப்படி பிளவு பட்டு சிதறி கிடப்பதால் நம்முடைய பல அடிப்படை உரிமைகளைகூட அரசிடமிருந்து கேட்டுப்பெற முடியாத நிலை இந்த தமிழகத்தில் நிலவுகிறது. கேரளத்தை பார்த்தாவது நாம் ஒன்றுபட வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...