Pages

Wednesday, August 5, 2015

பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க தீவிர நடவடிக்கை !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரூராட்சிகள் துறைகள் சார்பில் பிளாஸ்டி ஒழிப்பு தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது...
தஞ்சாவூர் மாவட்டம் பேரூராட்சி பகுதிகளில் பொது மக்களால் பயன்படுத்தி தூக்கி எரியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், கேரிபேக் ஆகியவைகளால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுகிறது. அவற்றை எரிப்பதால் Dioxide என்ற நச்சுப் பொருள் உருவாகி பொது மக்களுக்கு கேன்சர் மற்றும் உயிர் கொல்லி நோய்களை ஏற்படுத்துகிறது.  கால்நடைகள் பிளாஸ்டிக் பைகளை உட்கொண்டு இறக்கின்றன.  இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள்  எடுத்து வருகிறது. இதன் அடிப்படைடியில், பொது மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த வேண்டாம் என்றும், அவைகளை தெருக்களில் தூக்கி எறிய வேண்டாம் எனவும் பல அறிவிப்புகள் மற்றும் விழிப்புணர்வு பேரணிகள் வாயிலாக பேரூராட்சிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமும் விழிப்புணர்வு நடவடிக்ககள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் பைகளை வியாபார நிறுவனங்கள் விற்பனை செய்வதை தடை செய்து அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளது.  இதையும் மீறி விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படும். தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் மீறினால் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுவதுடன் மேற்படி நிறுவனங்களுக்கு சீல் வைக்கவும், அத்தகைய நிறுவனங்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பேரூராட்சி பணியாளர்கள் மூலம் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யப்படும்.  பிளாஸ்டிக் பைகளை பொது மக்கள் முற்றிலும் தவிர்க்கும் வகையில், அதற்கு மாற்றாக மகளிர் சுயஉதவிக் குழு மூலம் துணிப் பைகள் விநியோகம் செய்யப்படும்.

பேரூராட்சி பகுதியில் சேகரமாகும் பிளாஸ்டிக் பைகளை துகளாக்கப்பட்டு தார்சாலை பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.  மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தடை செய்ய பேரூராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இது குறித்து பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான ஒரு செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 10.08.2015 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் இல்லாத பேரூராட்சி என உறுதிமொழி எடுத்தல், ஒருங்கிணைந்த துப்புரவு முகாம் நடத்துதல் மற்றும் துணி பைகளை நன்கொடையாளர்கள் மூலம் வழங்கப்படும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பேச்சுப் போட்டி, நாடகம், வினாடி வினா போட்டி மற்றும் மாறு வேட போட்டி நடத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துதல் தொடர்பான தீமைகள் மற்றும் மறுசுழற்சி செய்தல் தொடர்பான கண்காட்சி நடத்த வேண்டும். மனித சங்கிலி, மிதிவண்டி பேரணி, விழிப்புணர்வு குழு மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மகளிர் குழு, சமுதாய கட்டமைப்பு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

பிளாஸ்டிக் தொடர்ந்து உபயோகிக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.  தொலைக்காட்சி மற்றும் உள்ளுர் தொலைக்காட்சிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விளம்பரங்கள் விளம்பரம் செய்யப்படும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பேரூராட்சி உதவி இயக்குநர் திரு.வ.மணி, முதன்மை கல்வி அலுவலர் திரு.ரெ.திருவளர்செல்வி, சுற்றுச் சூழல் பொறியாளர் திரு.ராஜ்குமார்,  வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.ஜெய்பீம் (தஞ்சாவூர்), திரு.அரங்கநாதன் (பட்டுக்கோட்டை), பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள்  பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...