Pages

Wednesday, August 5, 2015

அதிரையில் நாளை மாபெரும் இரத்த தானம் முகாம் !

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சப் கமிட்டி மற்றும் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தானம் முகாம் நாளை [ 06-08-2015 ] காலை 9 மணி முதல் அதிரை காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள செல்லியம்மன் சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தன்னார்வலர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமுதாய அமைப்புகளில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் ஆகியோர் திரளாக கலந்துகொண்டு குருதிக்கொடையை வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலதிக தகவல் மற்றும் இரத்த தானம் செய்ய விரும்புவோர்
அதிரை ரெட் கிராஸ் சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ் அவர்களை 9043140142 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நாளை நடைபெற இருக்கும் இரத்த தானம் முகாம் குறித்து அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் விதத்தில் விளம்பரப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...