Pages

Sunday, August 2, 2015

ஜிம்'முக்கு போக ஆசைப்படும் இளைஞர்கள் !

உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜிம்’முக்கு செல்பவர்கள் உண்டு. குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் ஜிம்முக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஜிம்மில் இடம்பெற்றுள்ள அதி நவீன கருவிகள் மூலம் தங்கள் உடம்பை கட்டுக்கோப்பாக பராமரித்து வருகின்றனர்.

ஜிம் பயிற்சி வழங்கி வருவது குறித்து அதிரை பேரூந்து நிலையம் எதிர்புறம் அமைந்துள்ள வணிக கட்டடத்தில் ( பழைய கனரா வங்கி மேல் மாடியில் ) இயங்கும் 'த்ரீ ஸ்டார் ஜிம்' நிறுவனர் நஜ்முதீன் நம்மிடம் கூறுகையில்...
'சிறந்த பயிற்சி பெற்ற டிரெய்னர் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. எடையை குறைப்பதற்கு அல்லது எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் ஜிம்முகளை நாடி வருகின்றனர். இருந்த இடத்தில் நடை பயிற்சியை மேற்கொள்ளவும், உடலின் இரத்த ஓட்டத்தை சீராக எடுத்துச்செல்லவும், வயிற்று பகுதியில் காணப்படும் தேவையற்ற கொழுப்புகளை கட்டுப்படுத்தவும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

வயிறு, இடுப்பு ஆகிய பகுதிகளில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைப்பதற்கு 'அப்டமன் பென்ச்', 'டுவிஸ்டர்' என்ற கருவிகள் உள்ளது. மேலும் தொடைகள், கால்களில் உள்ள கொழுப்பு ஆகியன குறைந்து தோளுக்கும் நல்ல வடிவம் தரும் 'ரோயிங்' என்ற கருவி உள்ளது. இதுபோன்று உடலின் எல்லா தசைகளுக்கும் நல்ல பயிற்சியை வழங்கும் கருவிகள் உள்ளன. மேலும் உடல் சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உடல் ஆரோக்கிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. உணவு கட்டுப்பாடுடன் ஆர்வத்துடன் பயிற்சியை தினமும் மேற்கொண்டால் குறிப்பிட்ட சில நாட்களில் உடலை கட்டுக்கோப்பாக மாற்றவும், உடல் ஆரோக்கியத்தை பெறவும் முடியும்' என்றார்.
தொடர்புக்கு 9944922949
 

2 comments:

  1. Physical fitness is really good for health !
    But, why did not use shoes ?
    Safety must specially inside the gym !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...