Pages

Monday, August 10, 2015

காதிர் முகைதீன் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஆங்கில வகுப்பு துவக்க விழா நிகழ்ச்சி !

நடப்பு கல்வியாண்டில் காதிர் முகைதீன் கல்லூரியில் இளங்கலை ஆங்கில பிரிவில் புதிதாக இணைந்த மாணவ மாணவிகளுக்கான துவக்க விழா சிறப்பு நிகழ்ச்சி கல்லூரியின் அரங்கில் நடைபெற்றது.

இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் தலைமையுரை நிகழ்த்தினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார். மேலும் ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் ஏ. முகம்மது முகைதீன், இணை பேராசிரியர் முனைவர் எம். சிக்கந்தர் பாஷா, பேராசிரியைகள் திருமதி எம். ஏ தஸ்லீமா, E. பிளோமினா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதுகலை ஆங்கிலம் இரண்டாமாண்டு மாணவி வினோலியா வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மண்ணின் மைந்தன் 'நகைச்சுவை தென்றல்' அண்ணா சிங்கார வேலு சிந்தனையை தூண்டும் நகைச்சுவை உரை நிகழ்த்தி அனைவரையும் அசத்தினார். சுமார் 1 மணி நேரம் நீடித்த உரையை மாணவ, மாணவிகள் அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.

முன்னதாக ஆங்கிலத்துறையின் தலைவர் முனைவர் ஏ. முகம்மது முகைதீன் ஆங்கில மொழி அறிவுத்திறனை வளர்த்துக்கொள்தல் குறித்து எழுச்சியுரை ஆற்றினார்.

விழாவில் மாணவ மாணவிகளின் ஆங்கில மொழி பேசும் அறிவை வளர்த்துகொள்ளும் வகையில் பிரபல ஆங்கில காலை நாளிதழ்கள் 300 மாணவ, மாணவிகளுக்கு தினமும் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரதிகளை கல்லூரி முதல்வர்  முனைவர் ஏ. ஜலால், ஆங்கிலத்துறையின் தலைவர் முனைவர் ஏ. முகம்மது முகைதீன், அண்ணா சிங்கார வேலு, இணை பேராசிரியர் முனைவர் எம். சிக்கந்தர் பாஷா, பேராசிரியைகள் திருமதி எம். ஏ தஸ்லீமா, E. பிளோமினா ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்கள்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் முதுகலை ஆங்கிலம் இரண்டாமாண்டு மாணவர் சி. ஐயப்பன் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் இளங்கலை மூன்றாமாண்டு மாணவி கவிதா நன்றி கூறினார். கல்லூரியின் ஆங்கில இளங்கலை இரண்டாம் ஆண்டு - மூன்றாம் ஆண்டு மற்றும் முதுகலை மாணவர்கள், பேராசிரியர்கள் சார்பில் ஆங்கில இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களை சிறப்பாக வரவேற்க்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...