Pages

Tuesday, August 11, 2015

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை !

பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான குறுவட்ட தடகள ( ஓட்டப்பந்தயம், அஞ்சல் ஓட்டம், நீளம் தண்டுதல், தடை தாண்டுதல், வட்டு எரிதல், குண்டு எரிதல்,உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல்) போட்டிகள் 06/08/2015 வியாழக்கிழமை பட்டுக்கோட்டை புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளியிலும், 10/08/2015 திங்கட்கிழமை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைப்பெற்றது.

இதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேனிலைப்பள்ளி மாணவர்கள் 38 பேர் கலந்துகொண்டு 67 புள்ளிகள் பெற்று குறுவட்ட அளவில் முதலாமிடம் பெற்று பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்தனர். மேலும் இவர்கள் மாவட்ட தடகள போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களை பள்ளி தலைமையாசிரியர் மஹ்பூப் அலி , உதவி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள் பாராட்டினர்.

இதில் இரண்டாமிடம் பிருந்தாவனம் மேல்நிலைப்பள்ளிக்கும், மூன்றாமிடம் கரம்பயம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் கிடைத்தது. மொத்தம் 57 பள்ளிகள் கலந்துகொண்டன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...