Pages

Saturday, August 8, 2015

முத்துப்பேட்டை அருகே வாலிபர் படுகொலை !

முத்துப்பேட்டை அருகே உள்ள அம்மா கட்டளையை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் வீரபாண்டியன் (25). இவர் நேற்று இரவு அங்குள்ள குளத்திற்கு மீன் பிடிக்க சென்றார்.

குளத்தின் கரையில் அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் வீரபாண்டியனை சரமாரி அரிவாளால் வெட்டியது. இதில் அவரது நெற்றி, கைகளில் பலத்த வெட்டு விழுந்தது.

அவரை அப்பகுதியினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வீரபாண்டியன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறில் வீரபாண்டியன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் அய்யனார் கோவில் திருவிழா கடந்த மாதம் 12–ந் தேதி நடைபெற்றது. அப்போது மண் குதிரை எடுத்து வரப்பட்டது.

அவர்களில் சிலர் அங்கிருந்த முவேந்தர் முன்னேற்ற கழக பேனரை கிழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதியை சேர்ந்த சரண்ராஜ் தட்டிக் கேட்டார்.

அவரை சிலர் தாக்கினார்கள். இது தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தான் வீரபாண்டியன் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அண்ணாத்துரை என்பவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது.

அவரது வீட்டின் பின்புறம் மர்ம ஆசாமிகள் தீ வைத்து விட்டு சென்று விட்டனர். பொதுமக்கள் உடனடியாக தீயை அணைத்து விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் கோவிலூரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தை திருவாரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பசூல்ஹக் பார்வையிட்டார்.

திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. அருண் மற்றும் மன்னார்குடி, திருவாரூர் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக கோவிலூரை சேர்ந்த சரண்ராஜ், சத்தியராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...