Pages

Monday, August 3, 2015

பட்டுக்கோட்டையில் தி.மு.க கோஷ்டி மோதல் !

பட்டுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடந்த திமுக கோஷ்டி மோதல் சம்பவம் தொடர்பாக 21 பேர் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் 3 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பட்டுக்கோட்டையில் திமுக வட்டக் கிளை நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் டி. செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 27-வது வட்டக் கிளை ஆய்வின்போது நகர்மன்ற உறுப்பினர் ரகுராமனுக்கும், அதே வார்டை சேர்ந்த செந்திலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் நாற்காலிகளால் பரஸ்பரம் தாக்கிக்கொண்டதோடு, சோடா பாட்டிலும் வீசினராம்.

இதில், செந்தில் கோஷ்டியைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக முன்னாள் நடத்துநர் கரிக்காடு எஸ். பன்னீர்செல்வம் (60), ரகுராமன் கோஷ்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அண்ணாகுடியிருப்பு ஆர். மணிகண்டன் (25) ஆகிய இருவரும் காயமடைந்தனர்.

பன்னீர்செல்வம் பட்டுக்கோட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையிலும், மணிகண்டன் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து, பன்னீர்செல்வம் அளித்த புகாரின் பேரில், திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் ரகுராமன், பரமேஸ்வரன் மற்றும் ரெங்கராஜ், ராஜ்பிரபு ஆகிய 4 பேர் மீதும், மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், செந்தில், பன்னீர்செல்வம், ராம்குமார் ஆகிய 3 பேர் மீதும் பட்டுக்கோட்டை போலீஸார் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு திரௌபதையம்மன் கோயில் தெரு அருகே மொபெட்டில் சென்ற நகர்மன்ற உறுப்பினர் சீனி. பன்னீர்செல்வம் ஆதரவாளரான ஜெ. வைத்தியநாதன் (39) என்பவரை நகர திமுக பொறுப்பாளர் த. மனோகரன் தலைமையில் சிலர் இரும்புக் கம்பியால் தாக்கி, அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பினராம்.

இதில், இடது கை சுண்டு விரல் துண்டான நிலையில் வைத்தியநாதன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளர் த. மனோகரன், சதீஷ், ஆதி. ராஜேஷ், பாலா, கார்த்தி, மாணிக்கம், மன்னாரு, அஜீஸ், இளங்கோ உள்பட 14 பேர் மீது பட்டுக்கோட்டை போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நன்றி:தினமணி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...