Pages

Monday, August 3, 2015

இங்கிலிஸ் தெரியாதவர்களுக்கு இனி வேலை கிடையாது: லண்டன் அரசு அறிவிப்பு !

பிரித்தானியாவில் பொதுப்பணி துறையில் சேர்ந்து பணியாற்ற விரும்புவர்களுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால், வேலை வாய்ப்பு வழங்க முடியாது என பிரித்தானிய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

பிரித்தானிய கேபினட் அமைச்சரான மேட் ஹேன்காக் வெளியிட்டுள்ள செய்தியில், 'பொது மக்களை நேரடியாக தொடர்புக்கொள்ளும் போலிஸ் துறை, சமூக நலத்துறை, மருத்துவ துறை, கல்வித்துறை மற்றும் நகராட்சி, மாநகராட்சி துறைகளில் வேலை வாய்ப்பு பெற விரும்புவர்கள் கட்டாயம் ஆங்கிலத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும்' என்றார்.

வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்து பொதுப்பணி துறைகளில் பணி புரியும் மக்களுக்கு ஆங்கிலம் சரியாக பேசத்தெரியாததால், அவர்களால் பொதுமக்களின் குறை நிறைகளை கண்டறிய முடிவதில்லை.

இது தொடர்பாக புலம்பெயர்வு மசோதா ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாகவும், இதனை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் நடை முறைப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுப்பணி துறையில் பணிபுரிபவர்கள் அல்லது புதிதாக பணியில் சேர விரும்புவர்கள் குறைந்த பட்சம் பள்ளி முடித்த அளவு ஆங்கிலத்தையாவது பேச வேண்டும்.

இதனை சிறப்பாக செயல்படுத்துவதற்கு அதிகாரிகள் நியமிக்கப்படுவதுடன், பணியில் இருப்பவர்கள் பொதுமக்களிடம் எவ்வாறு உரையாற்றுகிறார்கள் என்பதை கூர்ந்து கவனிப்பார்கள்.

ஏற்கனவே மேலே குறிப்பிட்ட துறைகளில் பணியில் இருப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால், அந்த மொழியை கற்றுக்கொள்ள கால அவகாசம் அளிக்கப்படும்.

இந்த நடவடிக்கை அதிக அளவில் பிரித்தானியாவில் குடியேறும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உதவும் என்றும், பிரதமர் கேமரூனின் ஆலோசனைப்படி இதுபோன்ற மேலும் சில திட்டங்களை நடை முறைப்படுத்த உள்ளதாக மேட் ஹேன்காக் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...