Pages

Wednesday, August 12, 2015

அதிரை ஈசிஆர் சாலையில் ஆயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: ஆயிலை குடம் குடமாக பிடித்து சென்ற பொதுமக்கள் !

அதிரை ஈசிஆர் சாலையில் ரிபைன்ட் சமையல் எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துகுள்ளானது. சாலையோரத்தில் கொட்டிய எண்ணெய்யை கிராம மக்கள் போட்டி போட்டு பிடித்துச் சென்றனர்.

தூத்துக்குடியிலிருந்து காரைக்காலுக்கு 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரியில் தனியார் நிறுவன ரிபைன்ட் சமையல் ஆயிலை ஏற்றிக்கொண்டு ஈசிஆர் சாலையில் காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 3.15 மணியளவில் அதிரை ஈசிஆர் சாலை பெரிய ஏரி அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி நிலைதடுமாறி சாலையோர கட்டாயத்தில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதனையடுத்து லாரியில் இருந்த எண்ணெய் அருவி போல கொட்டத் தொடங்கியது. விபத்து பற்றியும் ரிபைன்ட் ஆயில் கொட்டி கிடப்பது பற்றியும் தகவல் அறிந்து அப்பகுதியை சேர்ந்த கிராமத்தினர் குடங்கள், தண்ணிர் கேன், வாளிகளில் போட்டி போட்டு கொண்டு பிடித்துச் சென்றனர். காயமடைந்த விருது நகரை சேர்ந்த ஒட்டுநர் மாரிஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து அதிரை போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன நெருக்கடியை ரோந்தில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை போலீசார் ஒழுங்குபடுத்தினர். அதிகாலை நிகழ்ந்த விபத்தால் இந்தபகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...